By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற குழியில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

news team
Last updated: September 5, 2026 7:54 am
By news team
Share
1 Min Read
Slug URL: batticaloa-nediyamadu-6-year-old-boy-dies-unprotected-pit
SHARE

மட்டக்களப்பு, நெடியமடு பகுதியில் பாலம் அமைக்கும் பணிக்காக நீர் எடுப்பதற்காகத் தோண்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற பாரிய குழியில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (04) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நெடியமடு பகுதியைச் சேர்ந்த நாகராசா நவதீப் என்ற 6 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 6ஆம் கட்டை என அழைக்கப்படும் பகுதியில், நெடியமடு பாடசாலைக்கு எதிர்ப்புறமாக உன்னிச்சைக் குளத்திலிருந்து வயல் பகுதிக்குச் செல்லும் ஆற்றின் குறுக்கே நீர்ப்பாசன திணைக்களத்தினால் பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த கட்டுமானப் பணிகளுக்காக நீர் எடுப்பதற்காக சிறுவனின் வீட்டின் வேலிக்கு அருகில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இவ்வாறு பெரிய குழி தோண்டப்பட்டிருந்த போதிலும், அதனைச் சுற்றி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தன்று முற்பகல் 11.00 மணியளவில் சிறுவன் தனது வீட்டின் வேலிக்கு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக குறித்த குழிக்குள் தவறி விழுந்துள்ளார்.சிறுவனை உடனடியாக மீட்டு கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்துக்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன், சிறுவனின் சடலத்தை பார்வையிட்ட பின்னர் நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.பிரேத பரிசோதனைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.இதனிடையே, பாலம் அமைக்கும் பணிகளின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாததே இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

TAGGED:deathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கைக்கு சுமார் 3 தொன் காசநோய் மருந்துகளை இந்தியா நன்கொடையாக வழங்கியது
உள்நாடு

இலங்கைக்கு சுமார் 3 தொன் காசநோய் மருந்துகளை இந்தியா நன்கொடையாக வழங்கியது

By news team
ஜப்பானிய மாணவர்கள் இலங்கையில் சிரமதானம்: வெலிகந்த சுசிரிகமவில் வீதி புனரமைப்பு
உள்நாடு

ஜப்பானிய மாணவர்கள் இலங்கையில் சிரமதானம்: வெலிகந்த சுசிரிகமவில் வீதி புனரமைப்பு

By news team
2026-ல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படாது – கல்வி அமைச்சு
உள்நாடு

2026-ல் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படாது – கல்வி அமைச்சு

By news team
யாழ்ப்பாணத்தில் தரமற்ற உப்பு விற்றதற்காக இருவருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை
உள்நாடு

யாழ்ப்பாணத்தில் தரமற்ற உப்பு விற்றதற்காக இருவருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?