By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

வென்னப்புவையில் காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு – காதலன் வைத்தியசாலையில்

news team
Last updated: December 30, 2025 12:50 pm
By news team
Share
1 Min Read
வென்னப்புவையில் காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு - காதலன் வைத்தியசாலையில்
SHARE

கிங் ஓயாவில் குதித்து காணாமல்போன பாடசாலை மாணவி நேற்று (29) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்டவர் ஜா – எல, போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஆவார்.குறித்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) தனது 18 வயதுடைய காதலனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வென்னப்புவை பிரதேசத்திற்கு வரழைத்து காதலன் கண் முன்பு கிங் ஓயாவில் குதித்துள்ளார்.மாணவியை காப்பாற்ற முயன்று காதலனும் கிங் ஓயாவில் குதித்துள்ள நிலையில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆனால் மாணவி நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார். காணாம்போன மாணவி நேற்று திங்கட்கிழமை (29) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவியின் குடும்பத்தில் பல தனிப்பட்ட பிரச்சினைகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:deathmuthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் அருகே எரிபொருள் தொட்டியில் மீது ட்ரோன் தாக்குதல்
உலகம்

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் அருகே எரிபொருள் தொட்டியில் மீது ட்ரோன் தாக்குதல்

By news team
நிறை போதையில் சிகிச்சை பெற வந்த நபரால் யாழ். போதனா வைத்தியசாலையில் பதற்றம்
உள்நாடு

நிறை போதையில் சிகிச்சை பெற வந்த நபரால் யாழ். போதனா வைத்தியசாலையில் பதற்றம்

By news team
உத்தரப் பிரதேசம்: பக்கோடா வாங்கச் சென்ற கணவன் – திரும்பியபோது மனைவி மாயம்
இந்தியா

உத்தரப் பிரதேசம்: பக்கோடா வாங்கச் சென்ற கணவன் – திரும்பியபோது மனைவி மாயம்

By news team
இலங்கைக்கு மேலும் எரிவாயு கப்பல்: தட்டுப்பாடு இல்லை என லிட்ரோ உறுதி
உள்நாடு

இலங்கைக்கு மேலும் எரிவாயு கப்பல்: தட்டுப்பாடு இல்லை என லிட்ரோ உறுதி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?