By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அநுராதபுரத்தில் பெண்களுக்கு மயக்கமருந்து கொடுத்து கொள்ளை சம்பவம் – 17 இலட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் திருட்டு

news team
Last updated: April 20, 2026 5:21 am
By news team
Share
1 Min Read
அநுராதபுரத்தில் பெண்களுக்கு மயக்கமருந்து கொடுத்து கொள்ளை சம்பவம் – 17 இலட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் திருட்டு
SHARE

17 இலட்சம் ரூபா விற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,குறித்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அநுராதபுரம் பண்டுளகம பகுதியில் வைத்து கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய சாலியவெவ பகுதியைச் சேர்ந்தவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.கடந்த 02 ஆம் திகதி இரவு, அநுராதபுர பேருந்து நிலையத்திலிருந்து கொழும்புக்கு செல்லும் பேருந்தில் குறுகிய தூரம் பயணம் செய்து கொண்டிருந்த மூன்று பெண்களுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்தில் அவர்களுக்கு சிற்றுண்டியும் பானமும் வழங்கியுள்ளார்.அப்போது, அந்த மூன்று பெண்களும் மயங்கி விழுந்துள்ள நிலையில் மேலும், அடையாளம் தெரியாத அந்த நபர், பெண்களிடமிருந்து 17,06,400/= மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்க நகைகளைத் திருடிவிட்டுச் சென்றதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையிலேயே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

TAGGED:arrestcrimemuthalvanSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயன்ற 4 பேர் கைது
உள்நாடு

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயன்ற 4 பேர் கைது

By news team
இன்றைய வானிலை அறிக்கை
உள்நாடு

இன்றைய வானிலை அறிக்கை

By news team
ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்கா 30 நாள் அனுமதி
உலகம்

ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்கா 30 நாள் அனுமதி

By news team
13 வயது சிறுமி தாக்குதல் குற்றச்சாட்டு: கனடாவில் இலங்கைத் தமிழ் பெண் கைது
உலகம்

13 வயது சிறுமி தாக்குதல் குற்றச்சாட்டு: கனடாவில் இலங்கைத் தமிழ் பெண் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?