பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (29) இரவு சுமார் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வர்த்தகர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு காரில் வந்த குழுவினர் அவரது வீட்டுக்கு அருகில் வைத்து அவரைத் தாக்கி, காரின் கண்ணாடிகளை உடைத்து கடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் வர்த்தகரின் இரண்டு மகள்களுக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. எனினும், அவரது மனைவி காயமடைந்த நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடத்தல்காரர்கள் வர்த்தகரின் காரை வழிமறிக்க முயன்றபோது, அவர் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்தியதாகவும், இதன்போது கார் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வடிகாலுக்குள் விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து சந்தேகநபர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்து, வர்த்தகரை வாகனத்திலிருந்து வெளியே இழுத்து தாக்கிய பின்னர், அவரை தங்களது வாகனத்திற்குள் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் வர்த்தகரின் உறவினர் ஒருவர் இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக பாணந்துறை தெற்கு பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.சம்பவத்தில் வர்த்தகரின் கார் சேதமடைந்துள்ள நிலையில், பாணந்துறை பிரிவின் குற்றத்தடய விசாரணைப் பிரிவினரும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

Leave a Comment Leave a Comment