இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில், சுமார் 3 தொன் எடையுள்ள காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.இந்த மருத்துவப் பொருட்கள் இந்திய வானூர்திப் படையின் C-130J ரக வானூர்தி மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இலங்கையின் பொதுச் சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், அதற்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த மருத்துவ உதவிகள், இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முதலிடம்” (Neighbourhood First) கொள்கையின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் அவசர மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்திய வானூர்திப் படையின் C-130J சிறப்பு வானூர்தி மூலம் இந்த மருந்துகள் கொழும்பை வந்தடைந்துள்ளன.
