By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஒருவரையொருவர் முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்துகள் மோதி விபத்து

news team
Last updated: August 16, 2026 2:16 pm
By news team
Share
1 Min Read
ஒருவரையொருவர் முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்துகள் மோதி விபத்து
SHARE

கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இரண்டு தனியார் பேருந்துகள், கினிகத்தேனை – பேரகொல்ல பகுதியில் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்டபோது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சாரதிகள் கவனக்குறைவாகவும் அபாயகரமான முறையிலும் பேருந்துகளை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.விபத்தில் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், இரண்டு பேருந்துகளும் சேதமடைந்துள்ளன.விபத்துடன் தொடர்புடைய இரண்டு பேருந்துகளையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளதுடன், சாரதிகள் இருவரையும் நாளை (17) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.அதிவேகமாக வாகனம் செலுத்தியமை மற்றும் கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் இடைக்கிடையே பெய்துவரும் கடும் மழை காரணமாக வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுகின்றன. இது தொடர்பாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகளையும் குறித்த சாரதிகள் பொருட்படுத்தவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடும் மழையால் மண்சரிவு அபாயமும் அதிகரித்துள்ளதால், அப்பகுதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் வேகத்தைக் குறைத்து மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

## Short Description

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வென்னப்புவையில் காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு - காதலன் வைத்தியசாலையில்
உள்நாடு

வென்னப்புவையில் காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு – காதலன் வைத்தியசாலையில்

By news team
ஹெரோயின் போதைப்பொருளுடன் 22 வயது பல்கலைக்கழக மாணவி கைது
உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் 22 வயது பல்கலைக்கழக மாணவி கைது

By news team
மூடப்படும் அபாயத்தில் 1,500 பாடசாலைகள்: ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை
உள்நாடு

மூடப்படும் அபாயத்தில் 1,500 பாடசாலைகள்: ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

By news team
பிள்ளையான் செய்த குற்றங்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் – அமைச்சர் ஆனந்த விஜேபால
உள்நாடு

பிள்ளையான் செய்த குற்றங்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?