மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெல்லவாய–மொனராகலை வீதியின் கும்புக்கான களுபாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.வெல்லவாய நோக்கி பயணித்த டிப்பர் லொறி, எதிர்திசையில் வந்த டிராக்டருடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்து இடம்பெற்ற போது டிராக்டரின் டிரெய்லரில் 10 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 8 பேர் படுகாயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும், சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் பின்னர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்த மேலும் மூவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து தொடர்பில் டிப்பர் லொறி மற்றும் டிராக்டர் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
