By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பிள்ளையான் செய்த குற்றங்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

news team
Last updated: June 30, 2026 8:00 pm
By news team
Share
1 Min Read
பிள்ளையான் செய்த குற்றங்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் – அமைச்சர் ஆனந்த விஜேபால
SHARE

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கொடூரமான கொலைகளையும், பல்வேறு குற்றச் செயல்களையும் புரிந்தவர் என்றும், அவருக்கான தக்க தண்டனையை நீதிமன்றம் நிச்சயம் வழங்கும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் பிள்ளையான் இன்று ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறைச்சாலை வாகனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்போது தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என கூறியிருந்தமை பற்றி கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்,இது தொடர்பில் அமைச்சர் ஊடகங்களிடம் கூறுகையில்,மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதங்களைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளின் பின்னணியில் பிள்ளையான் இருந்துள்ளார் என்பது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளில் வெளிவந்துள்ளது.இவ்வாறான கொடூரக் கொலைகளையும் குற்றச் செயல்களையும் புரிந்துவிட்டு, இன்று தான் முற்றிலும் குற்றமற்றவர் என்று அவர் கூறுவது மிகவும் வேடிக்கையானது.அதிகார பலத்தைப் பயன்படுத்தி அவர் இத்தனை காலம் மறைத்து வைத்திருந்த அத்தனை இரகசியங்களும், பழிவாங்கல் குற்றங்களும் இப்போது நீதிமன்றத்தின் மூலம் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன.சட்டத்தின் முன்னால் யாரும் தப்பிக்க முடியாது. இத்தனை காலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், பிள்ளையான் புரிந்த குற்றங்களுக்கான தக்க தண்டனையை நீதிமன்றம் மிக விரைவில் வழங்கும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

TAGGED:Ananda WijepalaMinistry Of Public Securitymuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கோழி இறைச்சி பற்றாக்குறை இல்லை – பண்டிகைக்கு முழு விநியோகம்
உள்நாடு

கோழி இறைச்சி பற்றாக்குறை இல்லை – பண்டிகைக்கு முழு விநியோகம்

By news team
பாடசாலை ஆசிரியர் வீட்டில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு – 3 பேர் கைது
உள்நாடு

பாடசாலை ஆசிரியர் வீட்டில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு – 3 பேர் கைது

By news team
அர்ச்சுனாவுக்கு கேள்வி கேட்க உரிமை உள்ளது – எம்.பி. ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி
உள்நாடு

அர்ச்சுனாவுக்கு கேள்வி கேட்க உரிமை உள்ளது – எம்.பி. ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி

By news team
சர்வதேச சந்தை தாக்கம்- இலங்கையில் தங்க விலை கணிசமாக உயர்வு
வணிகம்

சர்வதேச சந்தை தாக்கம்- இலங்கையில் தங்க விலை கணிசமாக உயர்வு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?