By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

2 கிலோ தங்க நகை திருடிய இளம் பெண் யாழில் கைது

news team
Last updated: January 14, 2026 6:40 am
By news team
Share
1 Min Read
2 கிலோ தங்க நகை திருடிய இளம் பெண் யாழில் கைது
SHARE

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதியான, 2 கிலோ கிராம் தங்க நகைகளைத் திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் குறித்த இளம் பெண், தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாகத் தங்க நகைகளைத் திருடியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் இயங்கும் பிரபல நகைக் கடைகளில் ஒன்றில் சுமார் ஒன்றரை வருடம் பணியாற்றிய அப்பெண், 3 மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஜனவரி 21 ஆம் திகதி திருமணம் என்று கூறி பணியிலிருந்து விலகியுள்ளார்.இந்நிலையில், நகைக் கடையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 2 கிலோ கிராம் தங்க நகைகள் காணாமல் போனமை தெரியவந்துள்ளது. இது குறித்து ஆராயப்பட்ட போதே விடயம் கண்டறியப்பட்டு, யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் நகைக் கடை நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், குறித்த இளம் பெண்ணை நேற்று கைது செய்துள்ளனர்.அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில், திருடப்பட்ட நகைகளை அடகு வைத்தும், விற்பனை செய்தும், மீதியை நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.சான்றுப்பொருள்களை மீட்கும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

TAGGED:arrestmuthalvantamilnewstheft
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வெந்நீர் பாத்திரத்தில் விழுந்த 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
இந்தியா

வெந்நீர் பாத்திரத்தில் விழுந்த 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

By news team
2026 கல்வியாண்டின் முதலாம் தவணை நாளை (05) தொடக்கம்
உள்நாடு

2026 கல்வியாண்டின் முதலாம் தவணை நாளை (05) தொடக்கம்

By news team
மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு
உள்நாடு

மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

By news team
அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை: 12 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை
உள்நாடு

அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை: 12 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?