By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை: 12 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை

news team
Last updated: February 19, 2026 8:55 am
By news team
Share
1 Min Read
அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை: 12 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை
SHARE

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலைச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.நேற்று (18) கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறானவர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதை ஜனாதிபதி ஒரு பேனா அசைவில் செய்ய முடியும் எனக் கூறினார்.”அமரகீர்த்தி கொலைக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்குங்கள். இவ்வாறானவர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதென்பதை ஜனாதிபதி ஒரு பேனா அசைவில் செய்ய வேண்டும்,” என அவர் கூறினார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பேருக்கு, கம்பஹா விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் கடந்த 11 ஆம் திகதி மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:anuramuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

புலம்பெயர் பணப்பரிவர்த்தனை 26.5% உயர்வு – 2026 முதல் காலாண்டில் $2.29 பில்லியன் வரவு
உள்நாடு

புலம்பெயர் பணப்பரிவர்த்தனை 26.5% உயர்வு – 2026 முதல் காலாண்டில் $2.29 பில்லியன் வரவு

By news team
கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி
இந்தியா

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி

By news team
உற்சவ மண்டப உணவுப் பட்டியல் விலை உயர்வு: புதிய முன்பதிவுகளுக்கு 20% வரை கட்டணம் அதிகரிப்பு
உள்நாடு

உற்சவ மண்டப உணவுப் பட்டியல் விலை உயர்வு: புதிய முன்பதிவுகளுக்கு 20% வரை கட்டணம் அதிகரிப்பு

By news team
பருத்தித்துறை நகரசபை எல்லையில் இன்று முதல் உணவகங்களில் லஞ்ச் சீற் தடை
உள்நாடு

பருத்தித்துறை நகரசபை எல்லையில் இன்று முதல் உணவகங்களில் லஞ்ச் சீற் தடை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?