By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
இந்தியா

வெந்நீர் பாத்திரத்தில் விழுந்த 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

news team
Last updated: December 22, 2025 3:41 pm
By news team
Share
1 Min Read
வெந்நீர் பாத்திரத்தில் விழுந்த 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
SHARE

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா விஜயகிரி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா. இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தையை குளிக்க வைப்பதற்காக ரம்யா வெந்நீர் வைத்துள்ளார். தண்ணீர் மிகவும் சூடாக இருந்துள்ளது.இதனால் கொதிக்கும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனை ரம்யா கழிவறை அருகே வைத்துவிட்டு வீட்டுக்குள் துண்டை எடுக்க சென்றார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, வெந்நீர் இருந்த பாத்திரத்தின் அருகில் வந்துள்ளது. இதனை ரம்யா கவனிக்கவில்லை. இதனால் பாத்திரத்தை பிடித்து எழுந்த அந்த குழந்தை, எதிர்பாராதவிதமாக வெந்நீர் பாத்திரத்துக்குள் தவறி விழுந்தது.அந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர் கொதித்து கொண்டிருந்ததால் உள்ளே விழுந்ததும் உடல் வெந்து குழந்தை, பீறிட்டு கதறி அழுதது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரம்யா, ஓடி வந்தார். அப்போது வெந்நீர் பாத்திரத்துக்குள் குழந்தை உடல் வெந்து உயிருக்கு போராடியதை பார்த்து அதிர்ந்து போன அவர், உடனடியாக குழந்தையை மீட்டு உன்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக குழந்தை மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து உன்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

TAGGED:child deathdeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

anura-constitutional-amendments-drug-crime-sri-lanka
உள்நாடு

போதைப்பொருள் மற்றும் குற்றங்களைத் தடுக்க தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள தயார் – ஜனாதிபதி

By news team
அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வட்டி விகிதம் உயர்வு
உலகம்

அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வட்டி விகிதம் உயர்வு

By news team
கற்பித்தல் அனுபவம் கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க அரசாங்கம் திட்டம்
உள்நாடு

கற்பித்தல் அனுபவம் கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க அரசாங்கம் திட்டம்

By news team
குருநாகல் மாவட்டத்தில் திருமணமாகி இரு மாதங்களிலேயே இளைஞர் வாள்வெட்டில் பலி
உள்நாடு

குருநாகல் மாவட்டத்தில் திருமணமாகி இரு மாதங்களிலேயே இளைஞர் வாள்வெட்டில் பலி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?