By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – மன்னாரைச் சேர்ந்த 20 வயது இளைஞன் உயிரிழப்பு

news team
Last updated: February 15, 2026 11:55 am
By news team
Share
1 Min Read
கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – மன்னாரைச் சேர்ந்த 20 வயது இளைஞன் உயிரிழப்பு
SHARE

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபர் மன்னாரைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த பண்டாரவெளி பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய முஜாஹித் முஹம்மது சஹ்ரின் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன், கொழும்பில் வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றி வருவதாகவும், தன்னுடைய நண்பர் சகிதம் தலைமுடி வெட்டுவதற்காக சென்ற போதே இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு முகம்கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.ஜிந்துப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையத்திற்குள் நேற்று இரவு உள்நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.இதன்போது ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மன்னாரைச் சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.மேலும், படுகாயமடைந்த ஏனையவர்கள் கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.T-56 ரக துப்பாக்கி இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதாள உலகக் குழுக்களுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:deathgun shootmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அச்சுவேலி பகுதியில் காலாவதியான பிஸ்கட் விற்பனை– வர்த்தகருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த மல்லாகம் நீதிமன்றம்
உள்நாடு

அச்சுவேலி பகுதியில் காலாவதியான பிஸ்கட் விற்பனை– வர்த்தகருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த மல்லாகம் நீதிமன்றம்

By news team
நான் ஜனாதிபதியாக இருந்தால் எரிபொருள் வரிசை இருக்காது- பத்தரமுல்ல சீலரத்தன தேரர்
உள்நாடு

நான் ஜனாதிபதியாக இருந்தால் எரிபொருள் வரிசை இருக்காது- பத்தரமுல்ல சீலரத்தன தேரர்

By news team
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்
உள்நாடு

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்

By news team
களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு
உள்நாடு

களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?