By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஹோமாகம ஹோட்டலில் மாணவர்கள் விருந்தில் ஏற்பட்ட மோதல் – 19 வயது இளைஞர் உயிரிழப்பு 5 சந்தேகநபர்கள் கைது

news team
Last updated: April 10, 2026 8:18 am
By news team
Share
1 Min Read
ஹோமாகம ஹோட்டலில் மாணவர்கள் விருந்தில் ஏற்பட்ட மோதல் – 19 வயது இளைஞர் உயிரிழப்பு 5 சந்தேகநபர்கள் கைது
SHARE

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஹோட்டலில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுக்கு இடையில் நேற்று (09) இரவு நடத்தப்பட்ட விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.சம்பவத்தில் உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:arrestcrimemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

“‘உங்களால்தான் போட்டி சாத்தியமானது’ – பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி, அனுரகுமாருக்கு நன்றி”
உள்நாடு

“‘உங்களால்தான் போட்டி சாத்தியமானது’ – பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி, அனுரகுமாருக்கு நன்றி”

By news team
யாழில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் சேற்றில் மூழ்கி பரிதாபமாக பலி
உள்நாடு

யாழில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் சேற்றில் மூழ்கி பரிதாபமாக பலி

By news team
ஈரானிய எண்ணெய் வாங்க 30 நாள் அனுமதி – அமெரிக்கா தற்காலிக தடை நீக்கம்
உலகம்

ஈரானிய எண்ணெய் வாங்க 30 நாள் அனுமதி – அமெரிக்கா தற்காலிக தடை நீக்கம்

By news team
இலங்கைக்கு மேலும் எரிவாயு கப்பல்: தட்டுப்பாடு இல்லை என லிட்ரோ உறுதி
உள்நாடு

இலங்கைக்கு மேலும் எரிவாயு கப்பல்: தட்டுப்பாடு இல்லை என லிட்ரோ உறுதி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?