By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கியூஆர் எரிபொருள் முறை நீக்கப்படாது – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

news team
Last updated: May 12, 2026 10:33 am
By news team
Share
1 Min Read
கியூஆர் எரிபொருள் முறை நீக்கப்படாது – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு
SHARE

நாட்டில் தற்போது அமுலிலுள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.எரிபொருள் விநியோகத்தில் தற்போது எவ்வித தட்டுப்பாடும் இல்லை எனவும், தடையின்றி விநியோகிப்பதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு ஏற்கனவே ஓடர் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், தேவையற்ற எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்துவது அவசியம்.எரிபொருளுக்காக அதிகளவு அந்நியச் செலாவணி வெளியேறுவதைத் தடுப்பதற்கு இந்த முறையானது ஒரு கட்டுப்பாட்டை வழங்குகிறது.வரிசைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், மக்கள் மத்தியில் பீதி கலந்த கொள்வனவைத் தடுப்பதற்கும் இந்த முறைமை உதவியாக உள்ளமை போன்ற காரணங்களால் கியூ.ஆர் முறைமையைத் தொடர்வதாக குறிப்பிட்டார்.எதிர்காலத்தில் எரிபொருள் கோட்டாக்களை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாமே தவிர, கியூ.ஆர் முறையை முழுமையாக நீக்கப் போவதில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் குறியீடுகளை முறையாகச் சரிபார்க்காமல் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதி அமைச்சர் அர்க்கம் இலியாஸ் விளக்கமளித்தார்.”எரிபொருள் விநியோக முறைமையை அமைச்சு தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றது. விடுவிக்கப்பட்ட எரிபொருளின் அளவிற்கும், கியூ.ஆர் முறை மூலம் விநியோகிக்கப்பட்ட அளவிற்கும் இடையே பெரிய வேறுபாடுகள் காணப்பட்டால், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் எச்சரித்தார்.இது தொடர்பான தகவல்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு -இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
உள்நாடு

இலங்கையில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு -இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

By news team
வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகள் விடுவிப்பு – அரசின் புதிய அறிவிப்பு
உள்நாடு

வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகள் விடுவிப்பு – அரசின் புதிய அறிவிப்பு

By news team
நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்
உள்நாடு

நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

By news team
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் சீனிப்பாணியை ‘தூய தேன்’ என விற்றவர் கைது – கலப்பட நெய் உடன் பொருட்கள் பறிமுதல்
உள்நாடு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் சீனிப்பாணியை ‘தூய தேன்’ என விற்றவர் கைது – கலப்பட நெய் உடன் பொருட்கள் பறிமுதல்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?