By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, May 29, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
விளையாட்டு

நீருக்கடியில் சதுரங்கப் போட்டி: உலக சாம்பியன் பட்டத்தை வென்ற நெதர்லாந்து

news team
Last updated: January 1, 2026 2:57 am
By news team
Share
1 Min Read
நீருக்கடியில் சதுரங்கப் போட்டி: உலக சாம்பியன் பட்டத்தை வென்ற நெதர்லாந்து
SHARE

நெதர்லாந்தின் குரோனிங்கன் (Groningen) நகரில் நடைபெற்ற உலக டைவிங் செஸ் (Diving Chess) செம்பியன்ஷிப் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.இந்த போட்டி வழக்கமான சதுரங்கப் போட்டிகளைப் போலன்றி, இது நீச்சல் தடாகத்தின் அடியில் மூச்சைப் பிடித்துக்கொண்டு விளையாடப்படும் ஒரு வினோதமான மற்றும் சவாலான விளையாட்டாகும்.இம்முறை நடைபெற்ற உலக செம்பியன்ஷிப் போட்டியில் 40 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.இந்தப் போட்டியில் சதுரங்கப் பலகைகள் காந்தத் தன்மையுடனும் (Magnetic boards), காய்கள் பாரமானவையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு வீரரும் தண்ணீருக்கு அடியில் மூழ்கி, ஒரே மூச்சில் ஒரு நகர்வை (Move) மேற்கொண்டுவிட்டு, மீண்டும் சுவாசிப்பதற்காக மேலே வர வேண்டும்.
சில சமயங்களில் எதிராளியை திணறடிப்பதற்காக மிக வேகமாக நகர்வுகள் மேற்கொள்ளப்படும். இது வீரர்களின் நிதானத்தையும், மூச்சைக் கட்டுப்படுத்தும் திறனையும் ஒரே நேரத்தில் சோதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போட்டியில் நெதர்லாந்தின் முன்னாள்செம்பியனான சியோன் கோலன் (Zyon Kollen) ஆண்கள் பிரிவில் உலக செம்பியன் பட்டத்தை வென்றார்.நெதர்லாந்தைச் சேர்ந்த 17 வயதான ஜோசபின் டேமன் (Josephine Damen) பெண்கள் பிரிவில் உலக செம்பியனாக முடிசூட்டப்பட்டார்.இந்த ‘டைவிங் செஸ்’ விளையாட்டானது அமெரிக்க சதுரங்க வீரரான ஏடன் இல்ஃபெல்ட் (Etan Ilfeld) என்பவரால் உருவாக்கப்பட்டது. அறிவுத்திறனுடன் உடல் வலிமையையும் இணைக்கும் ஒரு விளையாட்டாக இது தற்போது உலகளவில் பிரபலம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஹெரோயின் போதைப்பொருளுடன் 22 வயது பல்கலைக்கழக மாணவி கைது
உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் 22 வயது பல்கலைக்கழக மாணவி கைது

By news team
அமெரிக்காவில் வானை 45,000 மைல் வேகத்தில் கிழித்து சென்ற எரிகல் அச்சத்தில் உறைந்த மக்கள்
உள்நாடு

அமெரிக்காவில் வானை 45,000 மைல் வேகத்தில் கிழித்து சென்ற எரிகல் அச்சத்தில் உறைந்த மக்கள்

By news team
இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கப்பலை மூழ்கடித்ததை உறுதிப்படுத்திய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்
உலகம்

இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கப்பலை மூழ்கடித்ததை உறுதிப்படுத்திய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

By news team
“கொள்ளையர்கள் போல நடந்தோம்” – எண்ணெய் கப்பல் கைப்பற்றியதாக ட்ரம்ப் தகவல்
உலகம்

“கொள்ளையர்கள் போல நடந்தோம்” – எண்ணெய் கப்பல் கைப்பற்றியதாக ட்ரம்ப் தகவல்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?