By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கப்பலை மூழ்கடித்ததை உறுதிப்படுத்திய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

news team
Last updated: March 4, 2026 8:00 pm
By news team
Share
1 Min Read
இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கப்பலை மூழ்கடித்ததை உறுதிப்படுத்திய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்
SHARE

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோவைப் (Torpedo) பயன்படுத்தி ஈரானிய கப்பல் ஒன்றை மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.எனினும், தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலின் பெயரை அவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.இதேவேளை, ‘IRIS Dena’ என அழைக்கப்படும் ஈரானிய போர்க்கப்பல் ஒன்று இன்று (04) அதிகாலை இலங்கைக்கு தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.அதிகாலை வேளையில் குறித்த கப்பலில் இருந்து விடுக்கப்பட்ட அவசர உதவிக் கோரிக்கைக்கு அமைய, இலங்கை கடற்படையினர் உடனடியாகச் செயற்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.விபத்து நிகழும் போது அந்தக் கப்பலில் சுமார் 180 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 32 பேர் இலங்கை கடற்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.எவ்வாறாயினும், மூழ்கிய கப்பலில் இருந்த சுமார் 140 பேரின் கதி என்னவென்று இதுவரை தெரியவரவில்லை எனவும், அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

TAGGED:IranIran-Israel Warmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஒரு வைத்தியரை உருவாக்க அரசுக்கு 60 இலட்சம் செலவு – அமைச்சர் உபாலி பன்னிலகே
உள்நாடு

ஒரு வைத்தியரை உருவாக்க அரசுக்கு 60 இலட்சம் செலவு – அமைச்சர் உபாலி பன்னிலகே

By news team
மத்திய கிழக்கு போர் பதற்றம் மத்தியில் இலங்கைக்கு 30,000 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் – மின்வெட்டு இல்லை என அறிவிப்பு
உள்நாடு

மத்திய கிழக்கு போர் பதற்றம் மத்தியில் இலங்கைக்கு 30,000 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் – மின்வெட்டு இல்லை என அறிவிப்பு

By news team
ஏப்ரல் மாதத்தில் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தடைகளும் ஏற்படாது - பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு
உள்நாடு

ஏப்ரல் மாதத்தில் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தடைகளும் ஏற்படாது – பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு

By news team
யாழ்ப்பாணத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது
உள்நாடு

யாழ்ப்பாணத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?