By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, May 29, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஒற்றை இலக்க வாகனத்திற்கு எரிபொருள் மறுப்பு: ஊழியரை அறைந்த சாரதி

news team
Last updated: April 22, 2026 2:09 pm
By news team
Share
1 Min Read
ஒற்றை இலக்க வாகனத்திற்கு எரிபொருள் மறுப்பு: ஊழியரை அறைந்த சாரதி
SHARE

கெஸ்பேவ – பண்டாரகம வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்த கார் ஒன்றிற்கு எரிபொருள் வழங்க மறுத்தமைக்காக, அதன் ஊழியரை கார் சாரதி தாக்கியுள்ளதாக கெஸ்பேவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்று (22) அமுலிலுள்ள வாகன இலக்கத் தகட்டின் இரட்டை எண்களுக்குப் பதிலாக, ஒற்றை எண்ணைக் கொண்ட குறித்த வாகனத்திற்கு எரிபொருள் வழங்க ஊழியர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாரதி, ஊழியரின் கன்னத்தில் அறைந்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காரின் இடதுபுற இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணைக் காண்பித்து, அவர் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி எனக்கூறி சாரதி எரிபொருளைப் பெற முயன்றுள்ளார். எனினும், ஊழியர் அதனை நிராகரித்தமையாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள வாகன இலக்கத்தின் அடிப்படையில், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேகநபரான சாரதியைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு சீனா உதவி – புதிய கப்பல் ஏப்ரலில்
உள்நாடு

இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு சீனா உதவி – புதிய கப்பல் ஏப்ரலில்

By news team
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுவேன் – மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு
உள்நாடு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுவேன் – மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு

By news team
அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்
உலகம்

அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்

By news team
13 வயது சிறுமி தாக்குதல் குற்றச்சாட்டு: கனடாவில் இலங்கைத் தமிழ் பெண் கைது
உலகம்

13 வயது சிறுமி தாக்குதல் குற்றச்சாட்டு: கனடாவில் இலங்கைத் தமிழ் பெண் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?