By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அங்குருவாதொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

news team
Last updated: June 4, 2026 7:08 am
By news team
Share
1 Min Read
அங்குருவாதொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
SHARE

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது ஹொணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன், அந்த மையத்தில் இருந்த சுமார் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அங்குருவாதொட, படகொட பகுதியில் அமைந்துள்ள ‘மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல’ என்ற முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று (03) பிற்பகல் இந்தத் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், இந்தத் தீ விபத்தினால் அந்த மையத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த இல்லத்திற்குள் சுமார் 72 பேர் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.தனியார் நிறுவனமாக நடத்தப்பட்டு வந்த இந்த மையத்தில், மனநலக் குறைபாடுடைய நபர்களும் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தீ விபத்து காரணமாக இல்லத்தில் இருந்த சிலர் தீயில் கருகியுள்ளனர். அவ்வாறு தீயில் கருகிய 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (04) காலை நடத்தப்பட்ட பின்னர், சடலங்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.எவ்வாறாயினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

TAGGED:deathfiremuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கிளிநொச்சியில் மனைவி விவாகரத்து கோரியதால் கோபம் கொண்டு கணவன் தென்னை மரங்கள் வெட்டி சேதம்
உள்நாடு

கிளிநொச்சியில் மனைவி விவாகரத்து கோரியதால் கோபம் கொண்டு கணவன் தென்னை மரங்கள் வெட்டி சேதம்

By news team
டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் அருகே எரிபொருள் தொட்டியில் மீது ட்ரோன் தாக்குதல்
உலகம்

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் அருகே எரிபொருள் தொட்டியில் மீது ட்ரோன் தாக்குதல்

By news team
இரண்டு மனைவிகள் – ஒரு கணவர்: உத்தரப் பிரதேச பஞ்சாயத்தின் வினோத தீர்ப்பு
இந்தியா

இரண்டு மனைவிகள் – ஒரு கணவர்: உத்தரப் பிரதேச பஞ்சாயத்தின் வினோத தீர்ப்பு

By news team
13 வயது சிறுமி தாக்குதல் குற்றச்சாட்டு: கனடாவில் இலங்கைத் தமிழ் பெண் கைது
உலகம்

13 வயது சிறுமி தாக்குதல் குற்றச்சாட்டு: கனடாவில் இலங்கைத் தமிழ் பெண் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?