By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்

news team
Last updated: February 11, 2026 8:08 am
By news team
Share
1 Min Read
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்
SHARE

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் சம்பவ இடத்திற்குச் சென்று களநிலவரங்களை ஆராய்ந்துள்ளனர்.இதன்போது காவல்துறையினரிடமும் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.அத்துடன், குறித்த வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரிடமும், உயிரிழந்த நபரின் உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.முன்னதாக, நேற்று அதிகாலை கட்டளையை மீறிப் பயணித்த சிற்றூர்தியின் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில், குறித்த சிற்றூர்தியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை, யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையின் கட்டளையை மீறிப் பயணித்த சிற்றூர்ந்து மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதனைக் கூறியுள்ளார்.அதற்கமைய யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினரும், ஊர்காவற்துறை காவல்துறையினரும் இணைந்து இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.

TAGGED:muthalvanSri Lanka PoliceSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பொலிஸ் கட்டளையை மீறி தப்பிச் சென்ற வேன்: துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
உள்நாடு

பொலிஸ் கட்டளையை மீறி தப்பிச் சென்ற வேன்: துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

By news team
இலங்கை நேரப்படி 3.30க்கு கிரிட்டிமாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது
உலகம்

இலங்கை நேரப்படி 3.30க்கு கிரிட்டிமாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது

By news team
சுன்னாகம் நகரப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்த இராணுவ முகாமில் பணியாற்றும் நபர் கைது
உள்நாடு

சுன்னாகம் நகரப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்த இராணுவ முகாமில் பணியாற்றும் நபர் கைது

By news team
மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு
உள்நாடு

மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?