By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

42 லட்சம் ரூபாய் சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பெண் கைது

news team
Last updated: June 29, 2026 12:21 pm
By news team
Share
1 Min Read
42 லட்சம் ரூபாய் சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பெண் கைது
SHARE

சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர், சீன பெண் கைதாகியுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து, திங்கட்கிழமை (29) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீனத் தொழிலதிபரான பெண் ஆவார். திங்கட்கிழமை (29) அன்று அதிகாலை 12:30 மணியளவில், சீனாவின் குன்மிங் (Kunming) நகரிலிருந்து, ‘சைனா ஈஸ்டர்ன்’ (China Eastern) விமான சேவைக்குச் சொந்தமான MU-6017 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள், சீனத் தயாரிப்பான 28,000 சிகரெட்டுகள் அடங்கிய 140 சிகரெட் காட்ன்கள் (cartons) மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சோதனையில் கண்டறியப்பட்டது.விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் எவ்விதப் பொருட்களையும் பிரகடனப்படுத்த வேண்டிய அவசியமில்லாத ‘பச்சை வழி’ (Green Channel) ஊடாகச் செல்ல முற்பட்ட போதே, அவர் சுங்க அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

குருநாகலில் மாணவருக்கு தகாத தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இசை ஆசிரியருக்கு பிணை மறுப்பு
உள்நாடு

குருநாகலில் மாணவருக்கு தகாத தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இசை ஆசிரியருக்கு பிணை மறுப்பு

By news team
களுத்துறை வடக்கில் துப்பாக்கிச்சூடு: 32 வயது நபர் தீவிர நிலையில் ICU-வில் அனுமதி
உள்நாடு

களுத்துறை வடக்கில் துப்பாக்கிச்சூடு: 32 வயது நபர் தீவிர நிலையில் ICU-வில் அனுமதி

By news team
சுரேஷ் சலே சித்திரவதை குற்றச்சாட்டு: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை தீவிரம்
உள்நாடு

சுரேஷ் சலே சித்திரவதை குற்றச்சாட்டு: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை தீவிரம்

By news team
ஒற்றை இலக்க வாகனத்திற்கு எரிபொருள் மறுப்பு: ஊழியரை அறைந்த சாரதி
உள்நாடு

ஒற்றை இலக்க வாகனத்திற்கு எரிபொருள் மறுப்பு: ஊழியரை அறைந்த சாரதி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?