கடந்த மாதத்தில் 360இற்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரகால தயார்நிலைப் பேரவை தெரிவித்துள்ளது.இணையவழியில் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அதன் பிரதம தகவல் பாதுகாப்புப் பொறியாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.கடந்த பண்டிகைக் காலங்களிலும், வெசாக் மற்றும் பொசன் பண்டிகைக் காலங்களிலும், போலி விளம்பரங்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதும், போலி விளம்பரங்கள் மூலம் கடன் அட்டைத் தகவல்கள் பெறப்படுவது குறித்தும் முறைப்பாடுகள் வந்துள்ளன.மக்கள் இதில் விசேட கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பணம் செலுத்தும்போது, அது சரியான இணையதளத்திலிருந்து மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.குறுஞ்செய்திகளில் வரும் இணையதளங்களில் உங்கள் தகவல்களை ஒருபோதும் உள்ளிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
