By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

யாழ்ப்பாணத்தில் தரமற்ற உப்பு விற்றதற்காக இருவருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை

news team
Last updated: June 3, 2026 10:48 am
By news team
Share
1 Min Read
யாழ்ப்பாணத்தில் தரமற்ற உப்பு விற்றதற்காக இருவருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை
SHARE

யாழ்ப்பாணத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் தரமற்ற உப்பினை விற்பனை செய்த குற்றங்களுக்காக பல்பொருள் அங்காடி மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன முகாமையாளர் ஆகியோருக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோப்பாய் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது. தரமற்ற உப்பு விற்பனைக்கு வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.நீதிமன்ற அனுமதியுடன் உப்பின் மாதிரியை கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி அரச இராசயன பகுப்பாய்வுக்கு அனுப்பி அறிக்கை கோரி இருந்தார்.உப்பு தரமற்றது என அறிக்கை கிடைக்கப்பெற்றதை அடுத்து , பல்பொருள் அங்காடி முகாமையாளர் மற்றும் உப்பு உற்பத்தி நிலைய முகாமையாளர் ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் பொது சுகாதர பரிசோதகர் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணை நேற்றைய தினம் (2) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இருவரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர்.அதனை அடுத்து ஒவ்வொரு குற்றத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று குற்றச்சாட்டுக்கு 18 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்று , ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்ததன் அடிப்படையில் ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.மூன்று குற்றங்களுக்கான சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க மன்று கட்டளையிட்டது. அதேவேளை குறித்த நிறுவனத்தால் மற்றைய அங்காடிகளுக்கும் வழங்கப்பட்ட உப்புக்களை அனைத்தையும் மீள பெற நடவடிக்கை எடுக்குமாறும் மன்று கட்டளையிட்டுள்ளது.

TAGGED:Court of Appeal of Sri Lankamuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

சட்டவிரோத எரிபொருள் வைத்தல், விற்பனை, கடத்தல்: மூவர் கைது
உள்நாடு

சட்டவிரோத எரிபொருள் வைத்தல், விற்பனை, கடத்தல்: மூவர் கைது

By news team
கிளிநொச்சி இளைஞர் கைது விவகாரம் தொடர்பில் பொலிஸார் விளக்கம்
உள்நாடு

கிளிநொச்சி இளைஞர் கைது விவகாரம் தொடர்பில் பொலிஸார் விளக்கம்

By news team
இஸ்ரேல்–அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 181 சிறுவர்கள் பலி 1இ097 பொதுமக்கள் உயிரிழப்பு
உலகம்

இஸ்ரேல்–அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 181 சிறுவர்கள் பலி 1097 பொதுமக்கள் உயிரிழப்பு

By news team
பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தம்பதியினர் கைது
உள்நாடு

பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தம்பதியினர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?