By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை – பொலிஸாக நடித்து பணம் பறிக்கும் மோசடி அதிகரிப்பு

news team
Last updated: April 19, 2026 9:18 am
By news team
Share
1 Min Read
இலங்கையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை – பொலிஸாக நடித்து பணம் பறிக்கும் மோசடி அதிகரிப்பு
SHARE

பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை வழங்கியுள்ளது.அதன்படி நாட்டில் பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொது மக்களிடம் பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.தொலைபேசி அல்லது இணையம் வாயிலாக சைபர் குற்றவாளிகள் தொடர்பு கொண்டு உங்கள் மீது ஒரு விசாரணை நடைபெற்று வருவதாக கூறி மிரட்டுகின்றனர்.அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற அல்லது நிவாரணம் வழங்க பணம் தேவை என வலியுறுத்துவதுடன் குற்ற விசாரணை என்ற போர்வையில் மக்களைப் பயமுறுத்தி பணத்தை பறிக்கின்றனர்.இவ்வாறான சைபர் மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், கடந்த ஆண்டில் மாத்திரம் சைபர் குற்றங்கள் தொடர்பாக 10015 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவற்றில் 3100 முறைப்பாடுகள் நேரடியாக இவ்வாறான சைபர் மோசடிகளுடன் தொடர்புடையவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எவரேனும் தொலைபேசி மூலம் பொலிஸார் என அடையாளப்படுத்தி பணம் கோரினால், உடனடியாக உங்கள் பகுதிக்கு அருகிலுள் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

TAGGED:crimemuthalvanSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு புதன்கிழமை விடுமுறை – எரிபொருள் நெருக்கடி காரணமாக புதிய தீர்மானம்
உள்நாடு

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு புதன்கிழமை விடுமுறை – எரிபொருள் நெருக்கடி காரணமாக புதிய தீர்மானம்

By news team
சட்டவிரோதமாக 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு 21 நாள் சிறை தண்டனை
உள்நாடு

சட்டவிரோதமாக 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு 21 நாள் சிறை தண்டனை

By news team
IDH மருத்துவமனையில் உயிரிழந்த தாய் மரணம் – தரமற்ற மருந்துகளே காரணம் என கணவர் குற்றச்சாட்டு
உள்நாடு

IDH மருத்துவமனையில் உயிரிழந்த தாய் மரணம் – தரமற்ற மருந்துகளே காரணம் என கணவர் குற்றச்சாட்டு

By news team
நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டு – மாமியார் உயிரிழப்பு மாமனார் படுகாயம்
உள்நாடு

நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டு – மாமியார் உயிரிழப்பு மாமனார் படுகாயம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?