By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு புதன்கிழமை விடுமுறை – எரிபொருள் நெருக்கடி காரணமாக புதிய தீர்மானம்

news team
Last updated: March 16, 2026 8:25 pm
By news team
Share
1 Min Read
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு புதன்கிழமை விடுமுறை – எரிபொருள் நெருக்கடி காரணமாக புதிய தீர்மானம்
SHARE

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (18) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார்.மேலும், வாரத்தின் ஏனைய 4 வேலை நாட்களிலும், எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இருப்பினும், இந்த விடுமுறையானது சுகாதாரத் துறை, துறைமுகங்கள், நீர்வழங்கல் மற்றும் சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட துறைகளுக்குப் பொருந்தாது என அவர் தெளிவுபடுத்தினார்.அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக, அனைத்து அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். அத்துடன் அனைத்து அரச விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் விடுமுறை தொடர்பில் தனியார் நிறுவனங்களும் இதே நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கோரப்படுவதாக இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அடகு வைத்த மோதிரங்களுக்குப் பதிலாக வேறு மோதிரங்கள்! ; நகைகளை மீட்க அரச வங்கிக்குச் சென்றவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
உள்நாடு

அட்டன் – டிக்கோயா பகுதியில் அரச வங்கியில் அடகு வைத்த மோதிரம் மாறியதாக குற்றச்சாட்டு

By news team
வித்யா கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி – பெண் மருத்துவரிடம் அத்துமீற முயற்சி
உள்நாடு

வித்யா கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி – பெண் மருத்துவரிடம் அத்துமீற முயற்சி

By news team
கல்முனையில் இறைச்சிக்காக நாய்கள் கொலை – பொலிஸார் விசாரணை
உள்நாடு

கல்முனையில் இறைச்சிக்காக நாய்கள் கொலை – பொலிஸார் விசாரணை

By news team
பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்ற 23 வயது பெண் மின்னல் தாக்கி பலி
உள்நாடு

பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்ற 23 வயது பெண் மின்னல் தாக்கி பலி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?