By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மிரிஹான எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது

news team
Last updated: June 5, 2026 11:56 am
By news team
Share
1 Min Read
மிரிஹான எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது
SHARE

மிரிஹான பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி நேற்று முன்தினம் (03) சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சந்தேகநபர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தத் தாக்குதல் சம்பவம் மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னியர பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், நேற்று முன்தினம் பிற்பகல்இடம்பெற்றுள்ளது.காணொளிப் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு மிரிஹான பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம், கோட்டை- மாதிவெல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர், ‘கியூ.ஆர்’ குறியீடு இன்றி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வந்துள்ளார்.இதன்போது, அங்கிருந்த ஊழியர் ‘கியூ.ஆர்’ குறியீடு இல்லாமல் எரிபொருளை வழங்க முடியாது என மறுத்ததால் ஆத்திரமடைந்த சந்தேகநபர், ஊழியர் மீது தாக்குதலை நடத்தியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது, பாதிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர், இப் பிரச்சினையைப் பொலிஸ் நிலைய மட்டத்தில் சமரசமாகத் தீர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

சுகாதார ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு மற்றும் தனி எரிபொருள் ஒதுக்கீடு அவசியம்
உள்நாடு

சுகாதார ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு மற்றும் தனி எரிபொருள் ஒதுக்கீடு அவசியம்

By news team
யாழில் எழுவைதீவுவில் வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்ச ரூபா மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் களவு
உள்நாடு

யாழில் எழுவைதீவுவில் வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்ச ரூபா மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் களவு

By news team
நிலத்தடியில் மறைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இன்னும் ஈரானிடம் – அமெரிக்க உளவுத்துறை தகவல்
உலகம்

நிலத்தடியில் மறைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இன்னும் ஈரானிடம் – அமெரிக்க உளவுத்துறை தகவல்

By news team
கல்கிசையில் துப்பாக்கிச்சூடு: இலக்கு உயிரிழந்தவர் அல்ல? விசாரணையில் புதிய தகவல்கள்
உள்நாடு

கல்கிசையில் துப்பாக்கிச்சூடு: இலக்கு உயிரிழந்தவர் அல்ல? விசாரணையில் புதிய தகவல்கள்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?