By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கடனை திருப்பிச் செலுத்தாததால் கடத்தி நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த கும்பல் கைது

news team
Last updated: March 25, 2026 8:06 pm
By news team
Share
1 Min Read
கடனை திருப்பிச் செலுத்தாததால் கடத்தி நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த கும்பல் கைது
SHARE

கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக, மேசன் தொழிலாளி ஒருவரைக் கடத்திச் சென்று நாய் கூண்டில் அடைத்து வைத்திருந்த கும்பலை லுணுவில பொலிஸார் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர்.கடந்த 23ஆம் திகதி லுணுவில, வென்னப்புவ மற்றும் பண்டிரிப்புவ ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டார்.கற்பிட்டி, நுரைச்சோலை – மாம்புரிப் பகுதியில் வசிக்கும் குறித்த மேசன் தொழிலாளி, கடந்த 23ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.இதன்போது, இனந்தெரியாத கும்பலொன்று கதவைத் தட்டி, அவரைப் பலவந்தமாக வெள்ளை நிற காரில் கடத்திச் சென்றுள்ளது.இது குறித்து அவரது மனைவி நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டினைத் தொடர்ந்தே விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.முதற்கட்ட விசாரணைகளில், பாதிக்கப்பட்ட நபர் பிரதான சந்தேக நபரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியமையே இந்தக் கடத்தலுக்குக் காரணமாகும்.கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை அவரை பண்டிரிப்புவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நாய் கூண்டுக்குள் அடைத்து வைத்து அக்கும்பல் சித்திரவதை செய்துள்ளது.பல மணி நேரம் உணவு மற்றும் நீரின்றி நாய் கூண்டில் அடைக்கப்பட்டிருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்தத் தொழிலாளி, தற்போது சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் ஆலோசனையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பில், பிரதான சந்தேக நபர் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.லுணுவில பகுதியைச் சேர்ந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAGGED:arrestmuthalvanSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி நகை கொள்ளை – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்
உள்நாடு

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி நகை கொள்ளை – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

By news team
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட்டை விடுதலை - கொழும்பு உயர் நீதிமன்றம்
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட்டை விடுதலை – கொழும்பு உயர் நீதிமன்றம்

By news team
இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கை இன்று சந்திப்பு
உள்நாடு

இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கை இன்று சந்திப்பு

By news team
ஏறாவூரில் விஷம் உட்கொண்டு உயிர்மாய்த்த வயோதிப தம்பதியினர் உயிரிழப்பு
உள்நாடு

ஏறாவூரில் விஷம் உட்கொண்டு உயிர்மாய்த்த வயோதிப தம்பதியினர் உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?