By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பாதாள உலகத்தை வளர்த்தவர்கள் இன்று அரசுக்கு சேறு பூச முற்படுகின்றனர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடும் பதில்

news team
Last updated: February 17, 2026 8:34 am
By news team
Share
1 Min Read
பாதாள உலகத்தை வளர்த்தவர்கள் இன்று அரசுக்கு சேறு பூச முற்படுகின்றனர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடும் பதில்
SHARE

கடந்த காலங்களில் பாதாள உலகக் குழுக்களையும் வன்முறையாளர்களையும் வளர்த்துவிட்டவர்களே இன்று அரசின் மீது சேறு பூச முற்படுகின்றனர் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-

நாட்டைப் பாதாள உலகக் கூடாரமாக மாற்றியவர்கள் யார் என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். வெள்ளை வான் கலாசாரத்தையும், பகிரங்கப் படுகொலைகளையும் சட்டபூர்வமாக்கிய ஒரு அரசியல் குழுவின் பிரதிநிதியாக இருந்துகொண்டு, சாகர காரியவசம் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையானது.தற்போதைய அரசு பொலிஸ் திணைக்களத்துக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அதனாலேயே, கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கினால் மறைக்கப்பட்ட பல குற்றச் செயல்கள் இன்று வெளிச்சத்துக்கு வருவதுடன், குற்றவாளிகள் தராதரம் பாராது கைது செய்யப்படுகின்றனர்.இந்தச் சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் திசைதிருப்பவே தேசிய மக்கள் சக்தி அரசு பாதாள உலகத்துடன் இணைந்துள்ளது என்ற அப்பட்டமான பொய்யை மொட்டுக் கட்சியினர் பரப்புகின்றனர்.சட்டத்தரணியும் அவரின் மனைவியும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியில் நீதியைத் தடுத்ததைப் போலன்றி, எமது ஆட்சியில் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.தேர்தல் களத்தில் மக்கள் தங்களை முற்றாக நிராகரித்துவிட்டனர் என்பதை உணர்ந்துள்ள மொட்டுக் கட்சி, இவ்வாறான அச்சமூட்டும் கதைகள் மூலம் மீண்டும் அரசியல் உயிர் பெற முயற்சிக்கின்றது.
பிரதமரின் கருத்துக்களைத் திரிபுபடுத்தி இராணுவத்தினரைத் தூண்டிவிடும் இவர்களின் இழிவான அரசியல் இனிமேலும் எடுபடாது. – என்றார்

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

Slug URL: batticaloa-nediyamadu-6-year-old-boy-dies-unprotected-pit
உள்நாடு

மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற குழியில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

By news team
இலங்கையில் டெங்கு பாதிப்பு 50,000-ஐ கடந்தது – 30 பேர் உயிரிழப்பு
உள்நாடு

இலங்கையில் டெங்கு பாதிப்பு 50,000 கடந்தது – 30 பேர் உயிரிழப்பு

By news team
உயிர்த்த ஞாயிறு விசாரணை: கைது தடை கோரி கோட்டாபய ராஜபக்ஷ மனு
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு விசாரணை: கைது தடை கோரி கோட்டாபய ராஜபக்ஷ மனு

By news team
thalawathugoda-travel-agency-rs65-million-robbery
உள்நாடு

தலவத்துகொட பயண முகவர் நிறுவனத்தில் ரூ.6.5 கோடி பணம், தங்க நகைகள் கொள்ளை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?