By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை

news team
Last updated: March 21, 2026 2:49 pm
By news team
Share
1 Min Read
யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை
SHARE

யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் மகளின் கணவனான 21 வயது மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் சாவகச்சேரியில் நேற்றுமுன்தினம்(19) இடம்பெற்றுள்ளது.குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.இதனையடுத்து விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பாண்டியன் தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர்.அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடியும் கிடைக்கப்பெற்றுள்ளது.அதன் அடிப்படையில், அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது.தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றையதினம்(19) திருகோணமலை பகுதியில் வைத்து விரிவுரையாளரின் மகளான 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் இருவரையும் கைது செய்துள்ளனர்.இதனையடுத்து, அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் , மருமகனின் தாக்குதலில் மாமியார் உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.சடலத்தை எடுத்து சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.விரிவுரையாளர் மருமகனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் யாழில் அடிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TAGGED:crimedeathmuthalvantamilnewsUniversity of Jaffna
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பு QR முறையை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
உள்நாடு

நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பு QR முறையை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

By news team
ஐபோன் பயனர்களுக்கு அப்பிள் அவசர எச்சரிக்கை: உடனடி மென்பொருள் புதுப்பிப்பு அவசியம்
தொழில்நுட்பம்

ஐபோன் பயனர்களுக்கு அப்பிள் அவசர எச்சரிக்கை: உடனடி மென்பொருள் புதுப்பிப்பு அவசியம்

By news team
யாழ்ப்பாணத்தில் தரமற்ற உப்பு விற்றதற்காக இருவருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை
உள்நாடு

யாழ்ப்பாணத்தில் தரமற்ற உப்பு விற்றதற்காக இருவருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை

By news team
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் சாதனை – 8 தங்கப் பதக்கங்கள் வென்ற அபிராமி நற்குணம்
உள்நாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் சாதனை – 8 தங்கப் பதக்கங்கள் வென்ற அபிராமி நற்குணம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?