By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

சட்டவிரோத எரிபொருள் வைத்தல், விற்பனை, கடத்தல்: மூவர் கைது

news team
Last updated: March 21, 2026 10:20 am
By news team
Share
1 Min Read
சட்டவிரோத எரிபொருள் வைத்தல், விற்பனை, கடத்தல்: மூவர் கைது
SHARE

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் போக்குவரத்து செய்தமை தொடர்பில் மூன்று வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (20) மாலை ஹங்வெல்ல, களுத்துறை வடக்கு மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எமுல்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அனுமதிப்பத்திரமின்றி 645 லீற்றர் டீசலை வைத்திருந்த 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவின் போசிரிபுர பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், அனுமதிப்பத்திரமின்றி 35 லீற்றர் 500 மில்லி லீற்றர் பெட்ரோலை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் புளுமெண்டல் பகுதியில் லொறி ஒன்றின் மூலம் அனுமதிப்பத்திரமின்றி 2000 லீற்றர் (10 பீப்பாய்கள்) டீசலைக் கடத்திச் சென்ற 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மேற்கொண்டு வருகின்றன.

TAGGED:arrestcrimemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

13.2 பில்லியன் ரூபா மோசடி: NDB வங்கி சம்பவத்தில் சர்வதேச விசாரணை ஆரம்பம்
உள்நாடு

13.2 பில்லியன் ரூபா மோசடி: NDB வங்கி சம்பவத்தில் சர்வதேச விசாரணை ஆரம்பம்

By news team
ஹட்டனில் அதிநவீன சஃபாரி பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்
உள்நாடு

ஹட்டனில் அதிநவீன சஃபாரி பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

By news team
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 கோடி ரூபாவுக்கும் மேல் நிதி மோசடி – 225 முறைப்பாடுகள், 200 பேர் கைது
உள்நாடு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 கோடி ரூபாவுக்கும் மேல் நிதி மோசடி – 225 முறைப்பாடுகள், 200 பேர் கைது

By news team
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட்டை விடுதலை - கொழும்பு உயர் நீதிமன்றம்
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட்டை விடுதலை – கொழும்பு உயர் நீதிமன்றம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?