By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 கோடி ரூபாவுக்கும் மேல் நிதி மோசடி – 225 முறைப்பாடுகள், 200 பேர் கைது

news team
Last updated: March 10, 2026 2:50 pm
By news team
Share
1 Min Read
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 கோடி ரூபாவுக்கும் மேல் நிதி மோசடி – 225 முறைப்பாடுகள், 200 பேர் கைது
SHARE

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும், யாழ்ப்பாணத்திலேயே மோசடிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன என யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாணம் விசேட குற்றவிசாரணைப் பிரிவில் கடந்த வருடம் 225 மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக இடம்பெறும் மோசடிகள், இணையக் குற்றங்கள் ஊடாக இடம்பெறும் மோசடிகள், காணி மோசடிகள், ஒன்லைன் மோசடிகள் என்பனவே அவற்றில் அடங்குகின்றன.அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 200 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.இத்தகைய மோசடிகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மீண்டும் அதிகரித்து வருகின்றன. இலங்கையின் வேறு பகுதிகளைக் காட்டிலும் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவு மோசடிகள் இடம்பெறுகின்றன.வெளிநாட்டு வாழ்க்கையில் மக்களுக்கு இருக்கும் ஆசையை மோசடியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இவ்வாறான மோசடியாளர்களிடம் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TAGGED:crimeMoneymuthalvanSri Lanka PoliceSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

குடும்பமாக சென்ற முச்சக்கர வண்டி விபத்து – தாய், பிள்ளைகள் பலி; தந்தை காயம்
உள்நாடு

குடும்பமாக சென்ற முச்சக்கர வண்டி விபத்து – தாய், பிள்ளைகள் பலி; தந்தை காயம்

By news team
மத்திய கிழக்கு போர் பதற்றம் மத்தியில் இலங்கைக்கு 30,000 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் – மின்வெட்டு இல்லை என அறிவிப்பு
உள்நாடு

மத்திய கிழக்கு போர் பதற்றம் மத்தியில் இலங்கைக்கு 30,000 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் – மின்வெட்டு இல்லை என அறிவிப்பு

By news team
வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகள் விடுவிப்பு – அரசின் புதிய அறிவிப்பு
உள்நாடு

வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகள் விடுவிப்பு – அரசின் புதிய அறிவிப்பு

By news team
உயிர்த்த ஞாயிறு விசாரணை: கைது தடை கோரி கோட்டாபய ராஜபக்ஷ மனு
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு விசாரணை: கைது தடை கோரி கோட்டாபய ராஜபக்ஷ மனு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?