கொழும்பு தொற்று நோய்கள் நிறுவனம் (IDH) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தாயான ஷானிகா சமரபால (37)வின் மரணத்துக்கு தரமற்ற மருந்துகளே காரணம் என அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளம் தாயார் 11 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளனர்.இந்நிலையில் தனது மனைவியின் மரணத்திற்கு நீதிகோரி நேற்று (23) அதுருகிரிய பொலிஸில் கணவர் முறைப்பாடளித்தார். இறந்த பெண்ணின் கணவர், ஹோமாகம, ஹபரகடாவைச் சேர்ந்த பி. சானக மதுசங்க கூறுகையில்,டெங்கு காய்ச்சலுக்காக தனது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
