By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஷிராந்தி ராஜபக்ச FCID-யில் இன்று முன்னிலை நாமல் ராஜபக்ச CID-க்கு அழைப்பு

news team
Last updated: February 3, 2026 8:26 am
By news team
Share
1 Min Read
ஷிராந்தி ராஜபக்ச FCID-யில் இன்று முன்னிலை நாமல் ராஜபக்ச CID-க்கு அழைப்பு
SHARE

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்சவை, இன்றைய தினம் (03) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு அங்கு முன்னிலையாகுமாறு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு ஷிராந்தி ராஜபக்சவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.எவ்வாறாயினும், அன்றைய தினம் தம்மால் வர முடியாது எனவும், அதற்காக 2 வார கால அவகாசம் வழங்குமாறும் தனது சட்டத்தரணி ஊடாக அவர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.எனினும், ஷிராந்தி ராஜபக்சவை இன்றைய தினமே மீண்டும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

TAGGED:muthalvannamalSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஐரோப்பாவில் கிட்கேட் லாரி கடத்தல் – 4 இலட்சம் சொக்லேட்கள் மாயம்
உலகம்

ஐரோப்பாவில் கிட்கேட் லாரி கடத்தல் – 4 இலட்சம் சொக்லேட்கள் மாயம்

By news team
பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து நிதி மோசடி: பொதுமக்களுக்கு CID அவசர எச்சரிக்கை
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து நிதி மோசடி: பொதுமக்களுக்கு CID அவசர எச்சரிக்கை

By news team
இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
உள்நாடு

இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

By news team
6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை முடிவு
உள்நாடு

6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை முடிவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?