By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, May 29, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மத்திய கிழக்கு மோதல்களில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் – நாமல் ராஜபக்ஷ கருத்து

news team
Last updated: March 4, 2026 1:23 pm
By news team
Share
1 Min Read
மத்திய கிழக்கு மோதல்களில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் – நாமல் ராஜபக்ஷ கருத்து
SHARE

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் மோதல்களில் பொதுமக்கள் காயமடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, எந்தவொரு இராணுவ நடவடிக்கை அல்லது மோதலின்போதும் பொதுமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள நாமல் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

கட்டடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது ஈரானிய ஆயுதப் படைகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏவுகணை தாக்குதல்களில் சிக்கி மத்திய கிழக்கில் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.பொதுமக்கள் பலர் ஒளிந்துகொள்ளவும் தஞ்சமடையவும், பாதுகாப்பான இடம் தேடிச் செல்வதாக கூறப்படுகிறது.எந்தவொரு இராணுவ நடவடிக்கை அல்லது மோதலின்போதும் பொதுமக்களின் பாதுகாப்பு ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாது.மேலும், மத்திய கிழக்கு உட்பட பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். மத்திய கிழக்குப் பகுதிகள் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், தற்போது ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் அங்கு பணிபுரிகின்றனர். அந்தப் பகுதிகளுக்கான வலுவான இராஜதந்திர உறவுகளை இலங்கை பேணிவருகிறது.எனவே, வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை எங்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம்.எந்தத் தூண்டுதலும் இல்லாமல் பொதுமக்கள், பொருளாதார நிலையங்கள் மற்றும் முக்கியமான உட்கட்டுமானங்களை குறிவைத்து நடத்தும் எந்தத் தாக்குதலும் ஏற்க முடியாதது.இதுபோன்ற செயல்கள் நிலைதடுமாற்றத் தன்மையை மேலும் தீவிரப்படுத்தி, உலகம் முழுவதும் குழப்பத்தையும் அச்சத்தையும் பரப்புகின்றன என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

TAGGED:muthalvannamaltamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

'வேறொருவருடன் பழகிய மனைவியை கத்தியால் தாக்கி கொலை: லண்டன் நீதிமன்றம் இலங்கை நபருக்கு ஆயுள் தண்டனை
உலகம்

‘வேறொருவருடன் பழகிய மனைவியை கத்தியால் தாக்கி கொலை: லண்டன் நீதிமன்றம் இலங்கை நபருக்கு ஆயுள் தண்டனை

By news team
உத்தரப்பிரதேசம்: திருமண ஊர்வல னுது சத்தம் காரணமாக கோழி பண்ணையில் 140 கோழிகள் உயிரிழப்பு
இந்தியா

உத்தரப்பிரதேசம்: திருமண ஊர்வல DJ சத்தம் காரணமாக கோழி பண்ணையில் 140 கோழிகள் உயிரிழப்பு

By news team
டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் சிறை – அமெரிக்க நீதிமன்றம்
உலகம்

டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் சிறை – அமெரிக்க நீதிமன்றம்

By news team
நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டு – மாமியார் உயிரிழப்பு மாமனார் படுகாயம்
உள்நாடு

நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டு – மாமியார் உயிரிழப்பு மாமனார் படுகாயம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?