By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் – 188 பேர் உயிரிழப்பு, 1,500க்கும் மேற்பட்டோர் காயம்

news team
Last updated: June 26, 2026 8:50 am
By news team
Share
1 Min Read
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் – 188 பேர் உயிரிழப்பு, 1,500க்கும் மேற்பட்டோர் காயம்
SHARE

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் குறைந்தது 188 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த அனர்த்தங்களினால் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கராகஸ் (Caracas) மற்றும் லா குவைரா (La Guaira) மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.அங்குள்ள இடிபாடுகளுக்குள் மீட்புப் பணியாளர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.அத்துடன் காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.வெனிசுலாவில் நேற்று (25) 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளிலான ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.இதில் இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கமானது, 1900 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெனிசுலாவைத் தாக்கிய மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கமாகப் பதிவாகியுள்ளது.இதன் காரணமாக அங்கு 250க்கும் அதிகமான கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

சர்வதேச சந்தையில் தங்கம் சரிவு – இலங்கையில் 10,000 ரூபாய் வீழ்ச்சி
உள்நாடு

சர்வதேச சந்தையில் தங்கம் சரிவு – இலங்கையில் 10,000 ரூபாய் வீழ்ச்சி

By news team
உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி; மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தயார் என அமைச்சர்
உள்நாடு

உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி; மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தயார் என அமைச்சர்

By news team
ஆடைத் தொழிற்சாலை களஞ்சியசாலையில் தீப்பரவல்; 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

ஆடைத் தொழிற்சாலை களஞ்சியசாலையில் தீப்பரவல்; 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

By news team
அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் விடுமுறை மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு
உள்நாடு

அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் விடுமுறை மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?