By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

யாழ்ப்பாணம் நபரை இலக்காகக் கொண்டு சமூக வலைத்தளத்தில் ‘Gas Cooker’ ஆன்லைன் விற்பனை மோசடி – பொலிஸில் முறைப்பாடு

news team
Last updated: March 7, 2026 3:29 pm
By news team
Share
1 Min Read
யாழ்ப்பாணம் நபரை இலக்காகக் கொண்டு சமூக வலைத்தளத்தில் ‘Gas Cooker’ ஆன்லைன் விற்பனை மோசடி – பொலிஸில் முறைப்பாடு
SHARE

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை இலக்காகக் கொண்டு சமூக வலைத்தளத்தின் மூலம் ‘காஸ் குக்கர்’ (GAS COOKER)விற்பனை செய்வதாக கூறி தம்பதி ஒருவர் மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நவீன ரக காஸ் குக்கர் (GAS COOKER) விற்பனைக்கு உள்ளதாக முகநூலில் வெளியிடப்பட்ட விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த நபர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்.அதன்போது, காஸ் குக்கரை (GAS COOKER) பெறுவதற்காக பணத்தை தங்களது வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறும், மேலதிக தகவல்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து, காஸ் குக்கரின் விலை எனக் கூறப்பட்ட 32 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட நபர் அவர்கள் வழங்கிய வங்கி கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிட்டு, அதற்கான தகவலை வாட்ஸ்அப் மூலம் அவர்களுக்கு அறிவித்துள்ளார்.பின்னர் காஸ் குக்கரை அனுப்பி வைப்பதாக கூறிய அந்த நபர்கள், இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பல்வேறு காரணங்களை கூறி அவரை ஏமாற்றியுள்ளனர். அதன் பின்னர், பொருளை அனுப்பி வைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.ஆனால், காஸ் குக்கர் (GAS COOKER)அனுப்பி வைக்கப்பட்டதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அவர்கள் பயன்படுத்தியிருந்த வாட்ஸ்அப் இலக்கத்தை உடனடியாக அழித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து சந்தேகம் ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட நபர் அந்த முகநூல் கணக்கில் பயன்படுத்தப்பட்டிருந்த முகப்பு புகைப்படத்தை ஆராய்ந்துள்ளார். அப்போது அந்த புகைப்படம் ஒரு புகைப்படக்காரர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருந்த தம்பதியினரின் படம் என்பதும், மோசடிக்காரர்கள் அதனை பயன்படுத்தியிருந்ததும் தெரியவந்துள்ளது.இதன் பின்னரே தாம் மோசடிக்குள்ளானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:crimemuthalvanSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்ற கணவன் – நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியா

ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்ற கணவன் – நெகிழ்ச்சி சம்பவம்

By news team
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது
உள்நாடு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது

By news team
இலங்கையில் பேருந்து கட்டணம் 12.19% உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 – அதிக கட்டணம் வசூலித்தால் சட்ட நடவடிக்கை
உள்நாடு

இலங்கையில் பேருந்து கட்டணம் 12.19% உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 – அதிக கட்டணம் வசூலித்தால் சட்ட நடவடிக்கை

By news team
வென்னப்புவையில் காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு - காதலன் வைத்தியசாலையில்
உள்நாடு

வென்னப்புவையில் காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு – காதலன் வைத்தியசாலையில்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?