By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

முள்ளியவளையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் சீல்

news team
Last updated: July 4, 2026 1:06 pm
By news team
Share
1 Min Read
முள்ளியவளையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் சீல்
SHARE

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில், பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகம் ஒன்று சீல் வைக்கப்பட்டது.முள்ளியவளை சந்தைக்கு அருகில் அமைந்துள்ள குறித்த உணவகம் சுகாதார விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தண்ணீரூற்று பொது சுகாதார பரிசோதகர் கஜலவனால் நேற்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறித்த உணவகத்திற்கு இருபதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன், உணவகத்தை சீல் செய்வதற்கும் அனுமதி வழங்கியது.அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தண்ணீரூற்று பொது சுகாதார பரிசோதகர் கஜலவன் மற்றும் முல்லைத்தீவு பொது சுகாதார பரிசோதகர் பிரவீன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த உணவகத்தை நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (03) சீல் வைத்தனர்.பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் திடீர் சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

TAGGED:muthalvanPHItamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி
இந்தியா

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி

By news team
மரக்கறி லாரியில் மறைத்து கொண்டுவந்த பல கோடி பெறுமதியான போதை மாத்திரைகள் – நபர் கைது
உள்நாடு

மரக்கறி லாரியில் மறைத்து கொண்டுவந்த பல கோடி பெறுமதியான போதை மாத்திரைகள் – நபர் கைது

By news team
நிபா வைரஸ் குறித்து இலங்கையில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை – சுகாதார அமைச்சு
உள்நாடு

நிபா வைரஸ் குறித்து இலங்கையில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை – சுகாதார அமைச்சு

By news team
பிபிலையில் குடும்பத் தகராறில் தந்தை வெட்டிப் படுகொலை; மகன் கைது
உள்நாடு

பிபிலையில் குடும்பத் தகராறில் தந்தை வெட்டிப் படுகொலை; மகன் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?