By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மரணம்: பாதுகாப்பு அதிகாரி அளித்த வாக்குமூலத்தில் புதிய தகவல்கள்

news team
Last updated: July 18, 2026 8:43 am
By news team
Share
2 Min Read
முன்னாள் பொலிஸ் மா அதிபர் மரணம்: பாதுகாப்பு அதிகாரி அளித்த வாக்குமூலத்தில் புதிய தகவல்கள்
SHARE

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட காரணம் நிமித்தம் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. மாலபே, தலாஹேன பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் வீட்டில் நேற்று காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.காலை உடற்பயிற்சிக்காக செல்வதற்கு முன்னர் வீட்டிற்கு வெளியே வந்த விக்ரமரத்ன, அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.அதன் பின்னர், தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை அழைத்து அவரது பிஸ்டல் ரக துப்பாக்கியை விக்ரமரத்ன கேட்டுப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அந்த சந்தர்ப்பத்தில் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், “துப்பாக்கியைக் கொண்டு வாருங்கள். அது புதியதா? அல்லது பழையதா? என்று பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.அதன் பின்னர், தனக்கு ஒரு தண்ணீர் போத்தலை எடுத்து வருமாறு கூறி, விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை வீட்டிற்குள் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர் சென்ற பின்னர், விக்ரமரத்ன அந்த துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.உடனடியாக செயற்பட்ட வீட்டிலிருந்தவர்கள், அவரை விரைவாக கொழும்பு கிழக்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.உயிரிழக்கும் போது அவருக்கு 63 வயதாகும். விக்ரமரத்னவின் மகனின் மனைவி, வேறொருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாகக் கூறி பிரிந்து செல்வதற்காக விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையில், அந்த மகனின் மனைவி தான் குடும்ப வன்முறைக்கு ஆளானதாகக் கூறி சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் புகார் அளித்திருந்தார்.அங்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் குறித்து விக்ரமரத்ன மிகுந்த மனவேதனையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தான் பொலிஸ் மா அதிபர் பதவியை வகித்த பொலிஸ் திணைக்களத்தின் பணியகம், தனது மகனின் பிரச்சினையில் நடந்துகொண்ட விதம் குறித்து, உயிரிழந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் மிகுந்த கவலையுடன் பேசியிருந்ததாகவும் கூறப்படுகிறது.விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்ற கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.அதேபோல், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.

TAGGED:deathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நுவரெலியாவில் தங்கியிருந்த பெண் மருத்துவர் சடலமாக மீட்பு - CCTV காட்சிகள் அடிப்படையில் காதலனை தேடும் பொலிஸார்
உள்நாடு

நுவரெலியாவில் தங்கியிருந்த பெண் மருத்துவர் சடலமாக மீட்பு – CCTV காட்சிகள் அடிப்படையில் காதலனை தேடும் பொலிஸார்

By news team
மீகஸ்வெவாவில் பெண் சிசு உடல் கண்டெடுப்பு – பகுதி முழுவதும் பரபரப்பு
உள்நாடு

மீகஸ்வெவாவில் பெண் சிசு உடல் கண்டெடுப்பு – பகுதி முழுவதும் பரபரப்பு

By news team
நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது
உள்நாடு

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

By news team
கொழும்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற காதலி கைது
உள்நாடு

கொழும்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற காதலி கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?