By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Jun 13, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

உலக யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் அசத்தல்

news team
Last updated: June 13, 2026 9:31 am
By news team
Share
1 Min Read
உலக யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் அசத்தல்
SHARE

உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாணவிகள் இருவர் சர்வதேச யோகாசனப் போட்டியில் ஐந்து பதக்கங்களை வென்று குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளனர்.இந்தியாவின் அகமதாபாத் நகரில் உள்ள ஏகா அரங்கில் நடைபெற்ற “முதல் உலக யோகாசனப் போட்டி – 2026” இல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண மாணவிகள் கலந்து கொண்டனர்.புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையின் தரம் 10 மாணவி துவிஷா ரமேஷ் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்று அசத்தினார். அதேபோல் புனித வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலையைச் சேர்ந்த நிஸாஹரி பிரஸ்ஸண்நாத் ஒரு வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.76 நாடுகளைச் சேர்ந்த 522 யோகாசன வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற கடுமையான போட்டியில், இளம் இலங்கை மாணவிகள் வெளிப்படுத்திய திறமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.இவர்களின் இந்த வெற்றி, பாடசாலைகளுக்கும், குடும்பத்தினருக்கும் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திற்கும், இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உலக யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் அசத்தல்

உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாணவிகள் இருவர் சர்வதேச யோகாசனப் போட்டியில்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017 முதல் திட்டமிடப்பட்டது – பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017 முதல் திட்டமிடப்பட்டது – பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்

By news team
QR பதிவு சிக்கல்களுக்கு WhatsApp உதவி சேவை- டிஜிட்டல் பொருளாதார அமைச்சு
உள்நாடு

QR பதிவு சிக்கல்களுக்கு WhatsApp உதவி சேவை- டிஜிட்டல் பொருளாதார அமைச்சு

By news team
யாழ் பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் பரபரப்பு – வாளுடன் இளைஞனை துரத்திய நபர்
உள்நாடு

யாழ் பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் பரபரப்பு – வாளுடன் இளைஞனை துரத்திய நபர்

By news team
வெந்நீர் பாத்திரத்தில் விழுந்த 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
இந்தியா

வெந்நீர் பாத்திரத்தில் விழுந்த 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?