By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஈரான் தொடர்பான அமெரிக்க வர்த்தகத் தீர்மானம் – இலங்கை ஏற்றுமதிக்கு அபாய எச்சரிக்கை

news team
Last updated: January 14, 2026 8:56 am
By news team
Share
1 Min Read
ஈரான் தொடர்பான அமெரிக்க வர்த்தகத் தீர்மானம் – இலங்கை ஏற்றுமதிக்கு அபாய எச்சரிக்கை
SHARE

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒரு பெரும் சோதனையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வர்த்தக உத்தரவு அமைந்துள்ளது.ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் போது 25 சதவீத மேலதிக வரியைச் செலுத்த வேண்டும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.இந்த நிலையில், இலங்கையின் பிரதான ஏற்றுமதியில் ஒன்றான தேயிலையைக் கொள்வனவு செய்யும் முதல் பத்து நாடுகளில், ஈரானும் ஒன்றாக உள்ளது.மாதாந்தம் சுமார் 9,800 மெட்ரிக் தொன் தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அதேநேரம், இலங்கை ஏற்றுமதியின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா திகழ்கின்றது. இதன்படி, மொத்த ஏற்றுமதியில் 25 சதவீத பங்கைக் கொண்டுள்ள அமெரிக்கா மூலம், ஆண்டொன்றுக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கின்றது.இந்தநிலையில் ‘ஈரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடனான அனைத்து வர்த்தகங்களுக்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்’ என ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.ஏற்கனவே இலங்கை பொருட்கள் மீது 20 சதவீத வரி அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ளது.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மேலதிக 25 சதவீத வரி அமுல்படுத்தப்பட்டால், அமெரிக்க நுகர்வோருக்கு இலங்கை பொருட்களின் விலை கணிசமாக உயரும்.இது இலங்கையின் ஏற்றுமதி வருவாயைக் குறைப்பதோடு, உலக சந்தையில் இலங்கை பொருட்களின் போட்டித்தன்மையையும் பாதிக்கும் என ‘அருதா’ (Arutha Research) ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

TAGGED:americaDonald Trumpmuthalvantamilnewstax
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

QR மற்றும் ஒற்றை-இரட்டை முறை நீக்க வாய்ப்பு – அமைச்சர் விஜித ஹேரத்
உள்நாடு

QR மற்றும் ஒற்றை-இரட்டை முறை நீக்க வாய்ப்பு – அமைச்சர் விஜித ஹேரத்

By news team
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டில் இருந்தால் நடவடிக்கை அவசியம் - எதிர்க்கட்சித் தலைவர் அதிரடி சவால்
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டில் இருந்தால் நடவடிக்கை அவசியம் – எதிர்க்கட்சித் தலைவர் அதிரடி சவால்

By news team
போலித் தங்க ஆபரண விற்பனை: நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது
உள்நாடு

போலித் தங்க ஆபரண விற்பனை: நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது

By news team
லெபனான் போர்நிறுத்தத்தில் இல்லை என்ற அமெரிக்க அறிவிப்புக்கு ஈரான் கடும் கண்டனம் – ஒப்பந்தத்திலிருந்து விலகும் எச்சரிக்கை
உள்நாடு

லெபனான் போர்நிறுத்தத்தில் இல்லை என்ற அமெரிக்க அறிவிப்புக்கு ஈரான் கடும் கண்டனம் – ஒப்பந்தத்திலிருந்து விலகும் எச்சரிக்கை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?