இலங்கை முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் 17ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கைகளில் 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் 14 T-56 ரக துப்பாக்கிகள், 33 கைத்துப்பாக்கிகள் மற்றும் 25 ரிவோல்வர்களும் அடங்குவதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 2025ஆம் ஆண்டு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மொத்தம் 2,404 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.அவற்றில் 74 T-56 ரக துப்பாக்கிகள் அடங்கியிருந்ததாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இதனிடையே, இந்த ஆண்டு தொடக்கம் முதல் நாடளாவிய ரீதியில் **40 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அவற்றில் 35 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த ஆண்டு இதுவரை பதிவாகியுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டு 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல்

Leave a Comment Leave a Comment