By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tuesday, Apr 14, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

QR மற்றும் ஒற்றை-இரட்டை முறை நீக்க வாய்ப்பு – அமைச்சர் விஜித ஹேரத்

news team
Last updated: April 6, 2026 8:08 am
By news team
Share
1 Min Read
QR மற்றும் ஒற்றை-இரட்டை முறை நீக்க வாய்ப்பு – அமைச்சர் விஜித ஹேரத்
SHARE

ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியினால் நேற்று மாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழலால் உருவான எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.எனவே, விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட புதன்கிழமையை மீண்டும் வேலை நாளாக மாற்றுவதற்கும், QR முறைமை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க முறைமைகளை நீக்கி நிலைமையை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் கூறினார்.இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,நாங்கள் ஏற்கனவே புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தினோம். ஆரம்பத்தில் ஓரிரு வாரங்கள் சிரமங்கள் இருந்தன, வரிசைகள் உருவானது உண்மைதான்.இதனால் உடனடி நடவடிக்கையாக QR முறைமை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க விநியோக முறையை அறிமுகப்படுத்தினோம்.புதன்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்தோம். தற்போது வரிசைகளை இல்லாமல் செய்துள்ளோம். QR மற்றும் ஒற்றை-இரட்டை முறைமைகள் தற்போது சிறப்பாகச் செயற்படுகின்றன.இன்னும் சில நாட்களில் அந்த முறைகள் தேவையில்லை என்றால்,அவற்றை நீக்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.புதன்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிலைமை சீரானதும் தேவையேற்படும் போது மீண்டும் வேலைகளை ஆரம்பிப்போம்.எரிபொருள் கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதாலேயே அந்த நேரத்தில் அத்தகைய முடிவுகளை எடுத்தோம். ஆனால் இப்போது அச்சப்படத் தேவையில்லை.ஏப்ரல் மாதத்தில் மேலும் 9 கப்பல்கள் வரவுள்ளன என அவர் தெரிவித்தார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நீண்ட காலக் கட்டுப்பாடு நீக்கம் – Gmail மின்னஞ்சல் பெயரை மாற்றும் வசதி அறிமுகம்
தொழில்நுட்பம்

நீண்ட காலக் கட்டுப்பாடு நீக்கம் – Gmail மின்னஞ்சல் பெயரை மாற்றும் வசதி அறிமுகம்

By news team
பண்டத்தரிப்பில் இராணுவம் வெளியேற்றம் – காணி சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பு
உள்நாடு

பண்டத்தரிப்பில் இராணுவம் வெளியேற்றம் – காணி சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பு

By news team
யாழில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
உள்நாடு

யாழில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

By news team
யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?