தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

7 months ago


தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் பெருமாள் கோயில் வடக்கு வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக யாழ்ப்பாணம் மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன், சக வேட்பாளர்களாக வரதராஜன் பார்த்திபன், தவச்செல்வம் சிற்பரன், முருகானந்தன் யசிந்தன், கதிரேசன் சஜீதரன், குலேந்திரன் செல்ரன், அருள்பரன் உமாகரன், நாவலன் கோகிலவாணி மற்றும் மிதிலைச்செல்வி சிறிபத்மநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.