துபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் ரூ.3.66 கோடி பெறுமதியான தங்க நகைகளை** உரிய அனுமதியின்றி நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றதாகக் கூறப்படும் 38 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அங்கொடை, ஹல்கஹதெனிய வீதியைச் சேர்ந்த வர்த்தகப் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (28) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-226 விமானம் மூலம் நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் குறித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.அவர் எடுத்துச் சென்ற முதுகுப்பையில் 12 பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 916 கிராம் எடையுடைய தங்க வளையல்கள் மற்றும் தங்கச் சங்கிலிகள்** சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இன்று (29) காலை சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட மதிப்பீட்டின்படி, குறித்த தங்க நகைகளின் பெறுமதி ரூ.36,628,937.27 என மதிப்பிடப்பட்டுள்ளது.
தங்க நகைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், குறித்த பெண்ணுக்கு ரூ.250,000 அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளனர்.
ரூ.3.66 கோடி தங்க நகைகளுடன் இலங்கை பெண் கைது

Leave a Comment Leave a Comment