By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பயணத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறிய பிரேமலால் ஜயசேகர

news team
Last updated: September 6, 2026 3:58 pm
By news team
Share
2 Min Read
premalal-jayasekara-left-sri-lanka-before-travel-ban
SHARE

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, உச்ச நீதிமன்றம் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தத் தகவல் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னெடுத்தபோது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான, நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.மேலும், பயணத் தடை தொடர்பான உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அத்துடன், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரும் 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவு தொடர்பான சட்ட நடவடிக்கைகளை CID முன்னெடுத்தபோது, பிரேமலால் ஜயசேகர கடந்த ஓகஸ்ட் மாதமே வெளிநாடு சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.எனினும், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னரே மீண்டும் நாடு திரும்புவதற்கான விமானப் பயணச்சீட்டை ஏற்பாடு செய்திருந்ததாக CID தெரிவித்துள்ளது.2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.இதனை எதிர்த்து பிரேமலால் ஜயசேகர உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது.இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனக் குறிப்பிட்ட அவர்கள், அந்தத் தீர்ப்பை இரத்துச் செய்து உரிய தண்டனையை விதிக்குமாறு கோரியிருந்தனர்.இந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, முன்னதாக மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரும் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

TAGGED:muthalvanSupremeCourttamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க MQ-9 ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க MQ-9 ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு

By news team
கியூஆர் எரிபொருள் முறை நீக்கப்படாது – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு
உள்நாடு

கியூஆர் எரிபொருள் முறை நீக்கப்படாது – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

By news team
நடமாடும் டீசல் விற்பனை கும்பல் சிக்கியது – 1200 லீற்றர் பறிமுதல்
உள்நாடு

நடமாடும் டீசல் விற்பனை கும்பல் சிக்கியது – 1200 லீற்றர் பறிமுதல்

By news team
களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு
உள்நாடு

களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?