செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பேரணிக்கு பெருமளவான மக்கள் திரள்வார்கள் என அரசாங்கம் கருதினால், அதற்கு முன்னதாக தன்னை கைது செய்து சிறையில் அடைக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஏற்பாடு செய்து வரும் பேரணிகளுக்கு கிடைத்து வரும் அரசியல் ஆதரவுக்கு பதிலளிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பேரணிகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக SLPP அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தது.இந்த நிலையில், அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்க முயற்சிப்பதாக நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.தனது அரசியல் பலவீனங்களை மறைப்பதற்காக அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அனுராதபுரத்தில் செப்டம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணிக்கு மக்கள் பெருமளவில் திரண்டால், அதனை தடுக்கும் நோக்கில் தனக்கு எதிராக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
