By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

கனடா மீது 50% புதிய வரி: அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்திய பிரதமர் கார்னி

news team
Last updated: August 22, 2026 7:31 pm
By news team
Share
2 Min Read
கனடா மீது 50% புதிய வரி: அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்திய பிரதமர் கார்னி
SHARE

அமெரிக்கா மற்றும் கனடா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கனடாவின் சில பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரியை விதித்துள்ளது.இந்த புதிய வரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கனேடிய பொருட்கள் பாதிக்கப்படுகின்றன. இது அமெரிக்காவுக்கான கனடாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 5% ஆகும்.

பேச்சுவார்த்தையை நிறுத்திய கனடா

அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.மேலும், அமெரிக்கா விதிக்கும் புதிய வரிக்கு “டொலருக்கு டொலர்” அடிப்படையில் பதிலடி வரி விதிக்க கனடா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடைசி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், அவை நியாயமற்றவை, பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றும் கார்னி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒப்பந்தத்திற்கு அருகில் சென்ற இரு நாடுகளும்

புதிய வரிகள் அமுலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருக்கமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.எஃகு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீதான வரிகளை குறைப்பது உள்ளிட்ட பல விடயங்களில் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இறுதி கட்டத்தில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர், கனடா ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளின் கீழ் ஒப்பந்தத்தை இறுதி செய்ய மறுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும் பேச்சுவார்த்தை இல்லை.டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், புதிய வரிகள் அமுலுக்கு வரும் நிலையில் தற்போது மேலதிக பேச்சுவார்த்தைகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.புதிய வரிகள் மதுபானம், மரச்சாமான்கள், ஆடைகள், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் ஹொக்கி உபகரணங்கள் உள்ளிட்ட பல கனேடிய பொருட்களை பாதிக்கக்கூடும்.ஏற்கனவே எஃகு, மரப்பொருட்கள் மற்றும் வாகனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளும் கனேடிய தொழில்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா–கனடா உறவில் புதிய பதற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி இடையிலான வர்த்தக பதற்றம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள இந்த புதிய மோதல், எதிர்காலத்தில் அமெரிக்கா–மெக்சிகோ–கனடா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (USMCA) புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் கடினமாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGGED:Donald Trumpmuthalvantamilnewsusa
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள 21.6 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது, இருவர் தப்பினர்
உள்நாடு

வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள 21.6 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது, இருவர் தப்பினர்

By news team
பாராளுமன்ற ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வெளியானது
உள்நாடு

பாராளுமன்ற ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வெளியானது

By news team
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது
உள்நாடு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது

By news team
பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்திய SLTB பேருந்து கடத்தல் – பின்னர் மீட்பு
உள்நாடு

பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்திய SLTB பேருந்து கடத்தல் – பின்னர் மீட்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?