By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அர்ச்சுனாவுக்கு கேள்வி கேட்க உரிமை உள்ளது – எம்.பி. ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி

news team
Last updated: July 17, 2026 11:26 am
By news team
Share
2 Min Read
அர்ச்சுனாவுக்கு கேள்வி கேட்க உரிமை உள்ளது – எம்.பி. ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி
SHARE

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள் சார்பில் கேள்விகளை எழுப்புவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார்.கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாகஅவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள் சார்பில் கேள்விகளை எழுப்புவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாகக் கூறினார். அவ்வாறான கேள்விகளை கேட்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், அதைத் தடுப்பது ஜனநாயகத்துக்கு முரணானது என்றும் தெரிவித்தார்.மேலும், கூட்டத்தில் இருந்து அருச்சுனாவை வெளியேறுமாறு கூறுவதற்கு அமைச்சருக்கோ அல்லது வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.அதேநேரம், அருச்சுனா எழுப்பும் கேள்விகளுக்கு அரச அதிகாரிகள் உரிய முறையில் பதிலளிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் விசாரணை நடத்தப்படும் அல்லது விசாரணைக் குழு நியமிக்கப்படும் என உறுதியளித்தால், அதனை மக்கள் பிரதிநிதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.கூட்டத்துக்கு தலைமை தாங்கும் தலைவர், கூட்டத்தை ஒழுங்காக கட்டுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், இல்லையெனில் தலைமைத்துவம் பாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.நேற்றைய கூட்டத்திற்குள் கமக்கார அமைப்பினர் எனக் கூறிக்கொண்டு சிலர் நுழைந்ததாகவும், அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஆதரவாளர்கள் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.கடந்த காலங்களிலும் சிறீதரன் கூட்டத்தை விட்டு வெளியேறும்போது அவரது ஆதரவாளர்களும் வெளியேறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இது தவறான நடைமுறை என்றும் அவர் தெரிவித்தார்.வடக்கு மாகாணத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் தங்களது நேரத்தையும் வளங்களையும் ஒதுக்கி கூட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில், கூட்டம் இடைநிறுத்தப்பட்டமை பொருத்தமற்றது என்றும் அவர் கூறினார்.சிறீதரனோ அல்லது அருச்சுனாவோ வெளியேறியிருந்தாலும், கூட்டம் முழுமையாக நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் எதிர்காலத்தில் கூட்டங்களை குழப்பும் நடைமுறைக்கு அது வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார்.அரச அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், அவை குற்றப்புலனாய்வு திணைக்களம், பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், விசாரணை நிறைவடையும் முன்னர் பொது இடங்களில் யாரையும் குற்றவாளி எனக் குற்றம்சாட்டுவது தவறானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

TAGGED:Dr.Archuna Chavakachcherimuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

உத்தரப் பிரதேசம்: பக்கோடா வாங்கச் சென்ற கணவன் – திரும்பியபோது மனைவி மாயம்
இந்தியா

உத்தரப் பிரதேசம்: பக்கோடா வாங்கச் சென்ற கணவன் – திரும்பியபோது மனைவி மாயம்

By news team
யாழ்ப்பாணத்தில் கோர விபத்து - டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி இருவர் பலி
உள்நாடு

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி இருவர் பலி

By news team
அத்துருகிரியவில் பேருந்து - டிப்பர் மோதிய கோர விபத்து: 20 பேர் காயம்
உள்நாடு

அத்துருகிரியவில் பேருந்து – டிப்பர் மோதிய கோர விபத்து: 20 பேர் காயம்

By news team
சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும் - சண்முகம் குகதாசன்
உள்நாடு

சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும் – சண்முகம் குகதாசன்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?