By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

தொலைத்தொடர்பு கேபிள் திருட்டில் இருவர் கைது; ஐஸ் போதைப்பொருளும் மீட்பு

news team
Last updated: June 14, 2026 8:39 am
By news team
Share
1 Min Read
தொலைத்தொடர்பு கேபிள் திருட்டில் இருவர் கைது; ஐஸ் போதைப்பொருளும் மீட்பு
SHARE

தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை துண்டித்து திருடிய சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.நேற்று (13) ராகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 17 கிராம் 700 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சுமார் 922,750 ரூபாய் பெறுமதியான கேபிள்களை துண்டித்து திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் ரதுபஸ்வல மற்றும் கடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 34 வயதுடையவர்கள் ஆவர். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட கேபிள்களின் ஒரு பகுதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையில், தொலைபேசி கேபிள்களை துண்டித்து திருடியமை உட்பட பல சொத்துக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை மொரட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மொரட்டுவை பொலிஸ் பிரிவில் குற்றத்தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் குழுவொன்றினால் நேற்று சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மொரட்டுவை பொலிஸ் பிரிவில் சுமார் 180,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசி கேபிள்களை துண்டித்து திருடியமை மற்றும் வீடுகளை உடைத்து சொத்துக்களை கொள்ளையடித்தமை உள்ளிட்ட பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.கைது செய்யப்பட்டவர் ராவத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் மற்றும் செப்பு கம்பித் தொகுதியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:arrestmuthalvantamilnewstheft
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

தேங்காய் மட்டைகளுக்குள் மணல் மறைத்து கடத்தல் – கிளிநொச்சி சாரதி கைது
உள்நாடு

தேங்காய் மட்டைகளுக்குள் மணல் மறைத்து கடத்தல் – கிளிநொச்சி சாரதி கைது

By news team
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது – படகும் பறிமுதல்
உள்நாடு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது – படகும் பறிமுதல்

By news team
2026 கல்வியாண்டின் முதலாம் தவணை நாளை (05) தொடக்கம்
உள்நாடு

2026 கல்வியாண்டின் முதலாம் தவணை நாளை (05) தொடக்கம்

By news team
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க MQ-9 ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க MQ-9 ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?