By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

உலக எரிபொருள் விலை சரிவு – இலங்கையில் விலை குறைப்பு சாத்தியம்

news team
Last updated: June 27, 2026 7:12 am
By news team
Share
1 Min Read
உலக எரிபொருள் விலை சரிவு – இலங்கையில் விலை குறைப்பு சாத்தியம்
SHARE

உலகளாவிய எரிபொருள் விலைகள் தொடர்ந்து சரிந்து வருவதால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உறையாற்றிய பெர்னாண்டோ, அரசு இதுவரை ரூ. 57 பில்லியன் மதிப்பிலான எரிபொருள் மானியத்தை வழங்கியுள்ளதாகவும், இந்த மானியத் திட்டம் இந்த மாதம் முடிவடைய உள்ளதாகவும் தெரிவித்தார்.பொதுமக்கள் மீது தேவையற்ற நிதிச் சுமையை சுமத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்பதை வலியுறுத்திக் கூறிய அதேவேளையில், மானியத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து கொள்கை ரீதியிலான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலின் காரணமாக உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் உயர்வைத் தொடர்ந்து, உள்நாட்டு எரிபொருள் விலைகளைச் சிறிதளவு உயர்த்த வேண்டியிருந்தது என்று அமைச்சர் தெரிவித்தார்.இருப்பினும், சர்வதேச எரிபொருள் விலைகள் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளதாகவும், குறைந்த உலகளாவிய விலையில் வாங்கப்படும் எரிபொருள் இலங்கையை வந்தடையும்போது நுகர்வோர் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கைக்கு மேலும் எரிவாயு கப்பல்: தட்டுப்பாடு இல்லை என லிட்ரோ உறுதி
உள்நாடு

இலங்கைக்கு மேலும் எரிவாயு கப்பல்: தட்டுப்பாடு இல்லை என லிட்ரோ உறுதி

By news team
தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்திய 22 தேரர்களும் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு
உள்நாடு

தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்திய 22 தேரர்களும் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு

By news team
மீண்டும் விலையை உயர்த்திய லங்கா IOC எரிபொருள்
உள்நாடு

மீண்டும் விலையை உயர்த்திய லங்கா IOC எரிபொருள்

By news team
இலங்கை தங்க சந்தையில் மாற்றம் – இன்று விலை சரிவு
வணிகம்

இலங்கை தங்க சந்தையில் மாற்றம் – இன்று விலை சரிவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?