By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இலங்கையில் எரிபொருள் QR முறைமை மேலும் கடுமையாக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

news team
Last updated: June 1, 2026 1:09 pm
By news team
Share
2 Min Read
இலங்கையில் எரிபொருள் QR முறைமை மேலும் கடுமையாக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு
SHARE

தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.இந்த நெருக்கடி நிலையான சூழலில், எரிபொருள் நுகர்வை ஏதேனும் ஒரு வழியில் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்றும், இதன் மூலம் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை ஓரளவிற்குக் குறைத்துக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இந்த நெருக்கடி நிலைமை தொடர்வதன் காரணமாக, எரிபொருள் நுகர்வை பெருமளவில் குறைக்க வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே QR முறைமை மற்றும் கோட்டா முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் எரிபொருள் நுகர்வில் குறிப்பிடத்தக்களவு குறைப்பை ஏற்படுத்த முடிந்த போதிலும், அது இன்னும் நாட்டின் தேவைக்கான மட்டத்திற்கு வரவில்லை.”தற்போது உலக சந்தையில் எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால், பெருமளவிலான வெளிநாட்டு நாணயம் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதனை ஒப்பீட்டு ரீதியாகப் பார்த்தால், கடந்த ஜனவரி மாதத்தில் 186 மில்லியனாகவும், பெப்ரவரி மாதத்தில் 97 மில்லியனாகவும் இருந்த எரிபொருள் செலவினம், மே மாதமாகும்போது வெளிநாட்டு நாணயமாக 524 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

இந்த நிலைமையைத் தொடர்ந்து தாங்கிக்கொள்வது கடினம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஒரு நாடாக நாம் சிந்தித்து எரிபொருள் நுகர்வில் நிச்சயமாக ஏதேனும் ஒரு குறைப்பை ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.நாட்டை விட்டு வெளியேறும் டொலர்களின் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அது ஒருபுறம் எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு வழிவகுப்பதுடன், ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.எனவே, எதிர்காலத்தில் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனமும் (CPC), டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமையை மேலும் கடுமையான முறையில் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறினார்.இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கத்தை ஓரளவிற்குச் சமன் செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஏப்ரல் வரை எரிபொருள் பற்றாக்குறை இல்லை: அனைத்து இறக்குமதி முன்பதிவுகளும் உறுதி
உள்நாடு

ஏப்ரல் வரை எரிபொருள் பற்றாக்குறை இல்லை: அனைத்து இறக்குமதி முன்பதிவுகளும் உறுதி

By news team
இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சரித் அபேசிங்கவை நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
உள்நாடு

இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சரித் அபேசிங்கவை நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

By news team
டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டண திருத்தம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு
உள்நாடு

டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டண திருத்தம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு

By news team
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு – மருத்துவமனை தவறு என மக்கள் குற்றச்சாட்டு
உள்நாடு

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு – மருத்துவமனை தவறு என மக்கள் குற்றச்சாட்டு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?